உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிஜேபியை ஆதரிக்க மாட்டோம்: அண்ணாமலை

சிஜேபியை ஆதரிக்க மாட்டோம்: அண்ணாமலை

- நமது நிருபர் -கிருஷ்ணகிரியில் நடந்த பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை பேசியதாவது: வீ த லீடர்ஸ் விரைவாக அரசியல் கட்சியாக மாற உள்ளது. தமிழகத்தில் அரசியல் தலைவராக பள்ளிகள், கல்லூரிகளுக்கு அதிகம் செல்வது நான். மாணவர்கள் எப்படிப்பட்ட தமிழகம், இந்தியா வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்கிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m7f3k6v0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். மற்ற மாநிலங்கள் வளரும்போது தமிழகம் வளரவில்லை. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் தனி நபர் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி, தொகை குறைந்துள்ளது. ஹரியானா 18 சதவீதம், உபி 12 சதவீதம் உயர்ந்தது. அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி தொகை உயர்ந்தது. தமிழகம் எதிர்மறை வளர்ச்சி கண்டுள்ளது. நமது மாநிலத்தில் வருமானம் வரும் தொழில், அதன் மூலம் கிடைக்கும் வருமானம், அரசுக்கு செலுத்தும் வரி குறைகிறது. இது மிக மிக அபாயகரமான விஷயம். பொருளாதார குறியீடு அடிப்படையில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளோம். இதேபோன்று நடந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் 3 இடம் கீழே இறங்கி விடுவோம்.கவர்ச்சிகரமான திட்டங்கள் மக்களுக்கு பயன் கொடுக்காது. போட்டோஷூட் எதுவும் கொடுக்காது. நூலகத்தை திறந்து வைக்க 6 கோடி ரூபாய் செலவு செய்வது எதுவும் கொடுக்கப்போவது இல்லை. மேட்டூர் அணை சென்று தண்ணீரை திறப்பதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்வதால் எதுவும் நடக்காது. தமிழகத்திற்கு தேவை புதிய தொழிற்சாலை, வேலை வாய்ப்பு.இதை செய்யும் அரசுடன் வீ தலீடர்ஸ் அமைப்பு துணையாக இருக்கும்.அரசியல் என்றால் நிறை குறை இருக்கும். இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் பரிசோதனையாக வீ த லீடர்ஸ் உள்ளது. இதுபோன்ற பரிசோதனை எங்கும் நடந்தது இல்லை. முதல் தேர்தலாக உள்ளாட்சி தேர்தலில் நிற்கிறோம். இதுவரை நடந்த அரசியலை திருப்பிப் போட்டு செய்கிறோம். சிஜேபி கட்சிக்கு எப்போதும் ஆதரவு கொடுக்க மாட்டோம். நமது இலக்கு வேறு. அவர்களது இலக்கு வேறு. சிஜேபி, திமுகவுக்கு போராட உரிமை இருக்கிறது. சிஜேபி தரப்பினர் ஏதோ ஒரு காரணத்திற்காக ஏதோ ஒன்றை கொண்டு வருகின்றனர். வாக்காளர் பட்டியல் சரியில்லை என சொல்லும் காங்கிரஸ், திருத்தப்பணியின் போது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்ததா? தேர்தல் முடிந்து, முதல்வர் பதவியேற்று 6 மாதங்கள் ஆன பிறகு வாக்காளர் பட்டியல் சரியில்லை என காங்கிரஸ் வந்து நிற்கிறது. இதனையும் சுட்டிக் காட்டுவோம். ஏன் நாடகம் போடுகிறீர்கள் என்று கேட்போம்.தனி மனிதன் மீது பிரச்னை இருந்தால் அதனை சொல்ல வேண்டும். சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் சரியில்லை என்று சொன்னால் எப்படி. இந்த நாட்டில் நாங்களும் வாழ வேண்டும். இந்த அமைப்புகளை நம்பி குழந்தைகள் உள்ளனர். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

தேவதாஸ் புனே
அக் 24, 2026 10:48

அண்ணாமலை ஒரு தேசியவாதி..... அவர் ஒரு போதும் கரப்பானை ஆதரிக்க மாட்டார்.... புரிதல் தவறாக இருக்கலாம்....


K V Ramadoss
அக் 23, 2026 20:01

சுப்ரீம் கோர்ட் தேர்தல் கமிஷன் சரியில்லை என்று இதுவரை சொல்லவில்லை ...


bharathi
அக் 23, 2026 14:13

unable to understand his stand these days


manian
அக் 23, 2026 13:02

late realisation


Rengaraj
அக் 23, 2026 10:28

ஒரே நேரத்தில் மத்திய அரசையும் மாநில அரசையும் கேள்வி கேட்பது என்பது அரசியலுக்கு புதிதல்ல அண்ணாமலை செய்தால் அது தேசிய சிந்தனை யில் இருந்து விலகிவிட்டார் என்று எப்படி சொல்லமுடியும் ? சிஜேபி விஷயத்தில் அண்ணாமலை சொல்வதை தேசியவாதிகள் என்ற போர்வையில் இருக்கும் சில பேர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். பாஜக செய்வது அனைத்தையும் யாருமே கேள்வி கேட்கவே கூடாதா ? அப்படி கேட்டால் அவர் குறுகிய எண்ணம் கொண்டவரா ? பாஜகவின் கொள்கைகள் அனைத்தையும் கொண்டிருந்தால்தான் அவரை மதிப்பார்களா ? எப்படி விஜயை வளர்த்துவிட்டு திராவிட கட்சியை அளித்தார்களோ அதே போன்று சிஜேபி யை வளர்த்துவிட்டு காங்கிரஸ் கட்சியை ஒழிக்கப்பார்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ? பிஜேபி மறைமுகமாக சிஜேபியை வளர்க்கிறது என்றும் சொல்லலாமா ? பிஜேபியின் எதிரிவோட்டுகளை பிளக்க இதை ஒரு சந்தர்ப்பமாக பாஜக கருதுகிறது என்றும் சொல்லலாமா ? அடுத்து வரவிருக்கும் மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் சிஜேபி யை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றும் சொல்லலாமா ? கரப்பாண்பூச்சியை வெறுப்பவர்கள் ஆட்டோமேட்டிக்காக பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும் என்பதற்காக கரப்பாண்பூச்சியை அடியோடு ஒழிக்கமாட்டார்கள் என்றும் சொல்லலாமா ? இதற்கு பாஜக மறைமுகமாக ஆதரவு தருகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாமா ?


Kchandra Sekaran
அக் 23, 2026 18:15

தன்னை தமிழகத்திற்கு ஏன் அகில இந்தியாவிற்கும் அறிமுகப் படுத்திய பாஜகவுக்கு எதிராக பேசுவதைக் கூட ஏற்கலாம். ஆனால் கலவரக்காரர்களை ஆதரித்தும் அவர்கள் பக்கம் ஏதோ நியாயம் இருப்பது போன்றும் பேசுவதை ஏற்க இயலாது..


Prem Kumar‌
அக் 23, 2026 08:35

அண்ணாமலை பாஜகவில் இருந்தவரை தான் அவர் மனதில் தேசிய சிந்தனை இருந்தது. அதை விட்டு விலகியதும் ஒரு குறுகிய வட்டத்தில் வாழும் திராவிட கட்சிகளின் அனைத்து தேவையற்ற தகுதிகளும் அவருக்கு வந்து விட்டன. பிரதமரும் அமித் ஷா அவர்களும் கட்சியில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தவராக இருந்தாலும் அவர் தேசிய அரசியலுக்கு தகுதியற்றவர் என்பதை உறுதியாக நம்பினால் அவருக்கு எதிராக சரியான நேரத்தில் சரியான முடிவை தான் எடுப்பார்கள் என்பதற்கு அண்ணாமலை மற்றும் முருகன் இருவருமே சரியான உதாரணம். இனி இந்த இருவருக்கு மட்டுமல்ல எவருக்கும் இத்தகைய முடிவு தான் என்பதை தெளிவாக்கி விட்டார்கள்.


jss
அக் 23, 2026 07:19

தப்பு செய்வது திருத்திக் கொள்ளக்கூடியது் தவறு என்பது மன்னிக்கக்கூடியது அல்ல. மாணவர்கள் தப்பு செய்வார்கள்ஙாசிரியரால் திருத்தப்படுவார்கள். ஆனால் அரசியல்வாதிகள் தவறு செய்பவர்கள் அவர்ங்களுன் தவறு மக்களை பாதிக்கும். அதேபோல் அண்ணாமலை செய்த்து தப்பு மட்டுமே. அதை திருத்திக் கொள்ள முடியும்..காங்கிரஸ் திமுக செய்வது இப்பட்டமான தவறு. உலகில் தப்பு செய்யாத மனிதனை காணமுடியாது் வாழ்வில் எல்லோரும் தப்பு செய்கிறார்கள் திருத்திக்கொள்கிறார்கள். ஆனால் ஊழல் செய்த திராவிட கட்சியினர் மீண்டும் மீணனும் அதே தவறை இன்னும் மேன்மையாக செய்கிறார்கள். சட்ட ஒழுங்குக்கு கட்டு படுவதில்லை. ஆகையினால் அண்ணாமலை செய்த தவறை மறப்போம் அதை திருத்திக்கொள்ள இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கட்டும் மறுபடியும் இத்தகைய தவறு நேராமல் பாரத்த்துக்கொள்வாராக அதற்க்காக அண்ணாமலையை சாட வேண்டாம். தப்பு செய்பவர்கள் திருந்துவது மாதிரி அவரும் உண்மையின் பக்கம் திரும்புவார். தமிழகத்தின் அத்தியாவச தேவை அவர்.


GUNA SEKARAN
அக் 23, 2026 06:24

அண்ணாமலை சொல்வது, கேடு கெட்ட சிஜெபி கும்பலைப் பெரிய ஆட்களாக மாற்றி விடாதீர்கள் என்பதுதான். இடம் தராதீர்கள் என்பதுதான்.


நரேந்திர பாரதி
அக் 23, 2026 05:07

நேற்று சொன்னது வேற வாய்... இன்று சொல்வது நாற வாய்...


வில்லிபுத்தூரான்
அக் 23, 2026 04:40

நீங்கள் பாஜக கட்சியை விட்டு விலகியதால் அவர்களின் செயலை விமர்சிக்கிறேன் பேர் வழி என்று கரப்பானுக்கு முட்டுக் கொடுத்தீர்கள். கரப்பான்காலின் தேச விரோத எண்ணம் வெளியே வந்ததும் நிலை தடுமாறுகிறீர்கள்.குழப்பம் வேண்டாம்.பாஜக வின் சித்தாந்த வழியில் செல்வது தான் உங்களுக்கு நீண்ட கால நன்மை கிடைக்கும். இல்லாவிடில் சீமான் போல கடைசி வரை பேச்சு பேட்டி அறிக்கை என்று எந்தப் பலனும் இல்லாமல் காலத்தை ஓட்ட வேண்டியது தான்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை