உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆதிதிராவிடர் நல ஆணையம் ஜாதி பெயரில் இயங்குவதா?

 ஆதிதிராவிடர் நல ஆணையம் ஜாதி பெயரில் இயங்குவதா?

ஆதிதிராவிடர் நலத்துறை என இருந்ததை, 'சமூக நீதித்துறை' என, த.வெ.க., அரசு முறையாக பெயரிட்டுள்ளது. ஆனால், சட்டசபையில் தாக்கல் செய்த, சமூக நீதித்துறை மானிய கோரிக்கை ஏடுகளில், 'பட்டியல் பிரிவு மக்கள்' என குறிப்பிடாமல், 'ஆதிதிராவிடர்' என, அந்த துறை அமைச்சரால் உள்நோக்கத்தோடு குறிப்பிட்டதை கண்டிக்கிறோம். கிராமங்கள், தெருக்களின் பெயர்களில், ஜாதி அடையாளங்களை நீக்க, கலெக்டர்களுக்கு ஆதிதிராவிடர் நல ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஜாதி ஒழிப்பு பேசும் அந்த ஆணையம், குறிப்பிட்ட ஜாதி பெயரில் இயங்குவது பொருத்தமற்றது. ஆணையம் பெயரில் உள்ள, 'ஆதிதிராவிடர்' எனும் குறிப்பிட்ட ஜாதிப் பெயரை நீக்க வேண்டும். அரசின் கடித பரிமாற்றங்கள், ஆணைகளில், ஆதிதிராவிடர் என ஜாதிப் பெயர் இடம்பெறாமலிருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். - கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
செப் 30, 2026 12:29

மாப்பிளை நான் தான் என் சட்டை இரவல் என்று வெளியில் தெரியக்கூடாது. அரசின் Full சலுகைகள் வேண்டும். ஜாதி வெளியில் தெரியக்கூடாது.


Anantharaman Srinivasan
செப் 30, 2026 12:18

99% அரசு சலுகைகள் குறைவில்லாமல் கிடைக்கணும். ஆனால் பெயரைமட்டும்ஆதிதிராவிடர் என்று சொல்லிக்காட்டக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை