உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கீழடி திறந்த வெளி அருங்காட்சியகத்தில் மத்திய அரசு அகழாய்வு புறக்கணிப்பா?

கீழடி திறந்த வெளி அருங்காட்சியகத்தில் மத்திய அரசு அகழாய்வு புறக்கணிப்பா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நான்கரை ஏக்கரில், 67,363 சதுரடியில், 17.80 கோடி ரூபாயில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hgvv3j4f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், தமிழக தொல்லியல் துறை நடத்திய நான்கு, ஐந்து, ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம், சுடுமண் பானை, உலைகலன், சரிந்த நிலையில் உள்ள கூரை ஓடுகள், இணைப்பு குழாயாக பயன்படுத்தப்பட்ட சுடுமண் பானை ஆகியவற்றை மட்டுமே காட்சிப்படுத்தும் பணி நடக்கிறது.மத்திய தொல்லியல் துறை, 2015ல் நடத்திய அகழாய்வில், மிக நீண்ட செங்கல் கட்டுமான தரை தளத்தை கண்டறிந்தனர். தண்ணீர் உள்ளே வரவும், கழிவு நீர் வெளியே செல்லவும் குழாய் போன்ற அமைப்புடன் கொண்ட அந்த கட்டுமானத்தை, வெளிநாட்டில் இருந்து வந்திருந்த வரலாற்று ஆய்வாளர்கள் ஆச்சரியத்துடன் ஆய்வு செய்தனர். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான செங்கல் கட்டுமானம் என, வரலாற்று ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில், திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியில், மத்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்த முதல் மூன்று கட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் இடம் பெறவில்லை.கீழடி அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தின் மினியேச்சர் சிற்பம் பார்வையாளர்களை கவர்ந்த நிலையில், திறந்த வெளி அருங்காட்சியகத்தில் அது இடம் பெறாததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இங்கு, 10 கட்ட அகழாய்வு நடந்தது. அந்த இடங்கள் அனைத்தும் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நடவடிக்கை வேதனையை ஏற்படுத்துவதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Arinyar Annamalai
மே 24, 2025 20:24

இந்த கீழடி மேலடி எல்லாம் தேவையில்லா ஆணிகள். இதனால் என்ன பிரயோஜனம்?. த்ரவிஷன்கள் பழைய வரலாறை தோண்டினாலாவது நிறைய சுவாரஸ்யங்கள் கிடைக்கும் த்ரவிஷன்கள் அமைதி படை அமாவாசையை விட மிக மோசமான கேடிகள்


venugopal s
மே 24, 2025 17:51

.. தெரியுமா கற்பூர வாசனை?


மீனவ நண்பன்
மே 25, 2025 04:02

குளியலறை கழிப்பறை ஏதாவது அகழாய்வில் தென்பட்டதா ..மண்பாண்டங்கள் அல்லது உலோக சொம்புகள் கிடைத்ததா ?


Kasimani Baskaran
மே 24, 2025 09:03

இலக்கியங்களில் ஏராளமான சமாச்சாரம் இருக்கிறது. ஆனால் மாடல் அரசு அதையெல்லாம் விட்டுவிட்டார்கள். ஏனென்றால் இலக்கியம் சொல்வது போல சிவலிங்கம், கடவுள் சிலைகள் கிடைக்கும். அது திராவிடக்கொள்கைகளுக்கு எதிராக இருக்கும். அதை திராவிட மாடல் ஆய்வின் படி மறைக்க வேண்டி வரும்...


Murugan Gurusamy
மே 24, 2025 08:34

இல்லாத சரஸ்வதி நதியை ஆராய்ச்சி செய்ய பல ஆயிரம் கோடி வேஸ்ட், ஒரு வேலை கைபர் போலன் கனவாய் க்கு அப்பால் இருக்கும்


Devi Phd
மே 24, 2025 17:27

Yeah, its true


Raja k
மே 24, 2025 08:08

தொன்றுதொட்டு எந்த மத்திய அரசாங்கம்தான் தமிழகத்தின் தொன்மையை ஏற்றுக்கொண்டது, தமிழின் வரலாறை அழிக்கதான் மத்திய அரசு நினைக்கிறது, எதோ ஆங்கிலேயன் அரப்பா, மொகங்சதாரோ பற்றி தமிழோடு தொடர்பு படுத்தி போனான், தமிழகத்தில் கால வரலாறை குறைத்து சொல்வது, அல்லது மறைப்பது இதை மட்டும்செவ்வனே செய்கிறார்கள், எந்த ஆய்வுகளையும் செய்வதில்லை.


நசி
மே 24, 2025 07:49

எல்லா தமிழக ஆட்சியாளர்களுக்கும்‌ நேர்மையுடன்‌ செயல் திட்டத்தை‌அனுகுகிறார்களா. இல்லையே..ஊழல் செய்யதான்‌அனைத்து திட்டங்களும்..திரு கருணாநிதி ஆட்சி காலத்திலிருந்து கூவம் திட்டத்திற்கு செலவழித்த பணத்தில் மெரினாவை சுடுகாடு ஆக்கிய பணத்தில் தேவையில்லாமல் மணி மண்டபங்கள் அமைத்த பணத்தில் 30 எய்ம்ஸ் மருத்துவமனை‌அமைத்திருக்கலாம்..ஊழல் மூலம் முத்து எடுக்கும்‌ முதறிஞர்கள் நம்மவர்கள்


Palanisamy T
மே 24, 2025 12:07

1. அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு நெடுஞ்செழியன் அவர்கள் ஆட்சிக்கு வரவேண்டியவர். முந்திக் கொண்டு கருணாநிதி ஆட்சியை கைப்பற்றிவிட்டார். அரசியலில் அடிதடி தெரியாதவர் நெடுஞ்செழியன். அடிதடி தெரிந்தவர்கள்தான் ஊழல் செய்வார்கள். இது பொதுவான இந்திய அரசியல் வாதிகளின் கலாச்சாரம். 2. நீங்கள் சொல்வதுப் போல் மெரீனாவை சுடுகாடாக மாற்றியிருக்கக் கூடாது. இனிமேல் ஒவ்வொரூ முதலமைச்சருக்கும் இடுக்காடோடு மணிமண்டபமென்றால் நாளையோ நாளை மறுநாளோ மரினாவின் நிலைமை என்னாவது மக்களே இதற்க்கு எதிர்ப்புக் கொடுத்து உடனே இந்த வேண்டாத கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.


Arinyar Annamalai
மே 24, 2025 20:31

இன்னொரு சுனாமி வந்தால் எல்லா கல்லறையையும்/சிலைகளையும் சுருட்டி கொண்டு போயிடும்.


மீனவ நண்பன்
மே 24, 2025 04:35

பொழுது போகாதவங்க வெறும் வாயில் அவல் மெல்வது போல ...வரிப்பணத்தை கொட்டி ஓட்ட உடைசல் எல்லாம் பார்வைக்கு வெச்சு காமெடி பண்ணறாங்களான்னு புரியல ...


Palanisamy T
மே 24, 2025 06:52

" throwing pearls before swine " - ஏசு பிரான் அவர்களின் வாசகத்தை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். " வரிப் பணத்தை கொட்டி ஓட்ட உடைசல் எல்லாம் பார்வைக்கு வெச்சு காமெடி" - இது என்னப் பேச்சென்று தெரியவில்லை. நாம் இன்றும் கல்லுக்கும் முத்துக்கும் உள்ள வேற்றுமையறியாத வடிகட்டின மூடர்களாய் இருக்கின்றோம். தொல்ப்பொருள் ஆய்வாளரிகளின் இவ்வரிய சேவையை பாராட்டாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளலாம், தூற்றக் கூடாது. நம் தொன்மையான வரலாற்று உண்மைகளை வெளிக் கொண்டு வரும் இவர்களின் சேவைக்கு அடிப் பணிகின்றேன்.


முக்கிய வீடியோ