உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் தேதி கொடுப்பாரா? 7 மாதமாக காத்திருக்கும் ஆவின்

முதல்வர் தேதி கொடுப்பாரா? 7 மாதமாக காத்திருக்கும் ஆவின்

சென்னை:தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆவினில் பணி நியமனத்திற்காக, ஏழு மாதங்களாக, 120 பேர் காத்திருக்கின்றனர். ஆவின் நிறுவனத்தில், 'டெக்னிக்கல் ஆப்பரேட்டர், கம்ப்ரஸர் ஆப்பரேட்டர், பால் பாக்கெட் மிஷின் ஆப்பரேட்டர்' உட்பட பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்க, கடந்த ஆண்டு நவம்பரில், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இந்தாண்டு ஜனவரியில் வெளியாகின. அதன்படி, 120 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில், 80க்கும் மேற்பட்டோர், டெக்னிக்கல் பணியிடங்களுக்கும், மீதமுள்ளவர்கள் நிர்வாக பணியிடங்களுக்கும் தேர்வாகினர். தேர்வு முடிவு வெளியாகியும், நிர்வாக காரணங்களால் பணி நியமனத்திற்கான கவுன்சிலிங் தள்ளிப் போடப்பட்டு வந்தது. பின், கடந்த ஜூன் மாதம் கவுன்சிலிங் நடந்தது. ஜூலையில் பணி நியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் தேதி கிடைக்காததால், கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதுகுறித்து, ஆவின் பணிக்கு தேர்வானோர் கூறியதாவது: பணிக்கு செல்லும் நாளை எதிர்நோக்கி, கடந்த ஏழு மாதங்களாக காத்திருக்கிறோம். ஆனால், ஏதேதோ காரணங்களை கூறி தாமதித்து வருகின்றனர். கேட்டால், முதல்வர் 'அப்பாயின்ட்மென்ட்' கிடைக்கவில்லை என்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை