உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனுஷ்கோடியில் சுற்றுலா மேம்படுத்த அரசு முன்வருமா?

தனுஷ்கோடியில் சுற்றுலா மேம்படுத்த அரசு முன்வருமா?

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் ராமாயண வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமாயண வரலாற்றில் இலங்கை மன்னன் ராவணன் சிறைபிடித்த சீதா தேவியை மீட்க தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு கடலில் ராமர், லட்சுமணர் வானர சேனைகளுடன் பாலம் அமைத்தனர். பின் இலங்கையில் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு தனுஷ்கோடி திரும்பினர்.

புரட்டிப் போட்டது புயல்

அப்போது ராமர் எய்த அம்பு விழுந்த இடம் தான் தனுஷ்கோடி (வில், அம்பு) என பெயர் எழுந்தது. இதனால் பல ஆண்டுகளாக தனுஷ்கோடி கடலில் பக்தர்கள் புனித நீராடி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நீராடி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்தது. போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில் ராமேஸ்வரம் கோவிலில் இருந்து தனுஷ்கோடிக்கு சிறிய படகில் பக்தர்கள் சென்று வந்தனர்.கடந்த 1914ல் ஆங்கிலேயர்கள், பாம்பனில் இருந்து ரயில் போக்குவரத்தும், தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தையும் துவக்கினர். இதன் பின் வணிக நகரமாக உருவெடுத்தது. இத்துடன் சர்ச், கோவில், ரயில்வே ஸ்டேஷன், தபால் நிலையம், தங்கும் விடுதி கட்டடங்கள் உருவானது. வணிக நகரமாகவும் மாறியது.ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின் ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. 1964 டிச., 22 நள்ளிரவு ஏற்பட்ட புயல் தனுஷ்கோடியை புரட்டிப் போட்டதால் இங்கிருந்த சர்ச், கோவில்கள், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களும் இடிந்து சின்னாபின்னமாகின. அன்று முதல் தனுஷ்கோடிக்கு அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக அரசு அறிவித்தது.புத்துயிர் கொடுத்த பிரதமர் மோடி :பிரதமராக பதவி ஏற்ற மோடி நாட்டின் தென்கோடி முனையில் பாதுகாப்பு அரணாக உள்ள தனுஷ்கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைத்து 2017ல் திறந்து வைத்தார். அன்று முதல் தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடிக்கு வருகின்றனர். ஆனால் அங்கு ராமாயண வரலாற்றை சொல்லும் எந்த அடையாளங்களும் இல்லை. தனுஷ்கோடியில் ராமரின் பிரம்மாண்ட சிலை, ராமாயண வரலாற்றை மக்களுக்கு விளக்கும் காட்சி, சிற்பங்கள், ஓவியங்கள் அமைத்தால், சுற்றுலா பயணியரின் வருகை அதிகரிக்கும். மேலும் இளம் தலைமுறை மனதில் ராமாயண வரலாற்றை பதிய வைக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
ஜன 15, 2025 07:44

மத்திய அரசு அப்படி ஒரு முயற்சி எடுத்தால் மாநில அரசு அங்கு மூவேந்தர் - பெரியார் அண்ணா கலைஞர் சிலை வைத்து புதிய கதைகளை எழுதி திரைக்கதை வசனம் ஏற்பாடு செய்து பூஜை நடத்தக்கூட வாய்ப்பு இருக்கிறது


Tetra
ஜன 15, 2025 07:18

தயவு செய்து ராமபிரானுக்கு 50 60என்று சிலை எழுப்பாதீர்கள். அதற்கு பதில் ஒரு புதிய ராமர் கோவில் எழுப்பி முறையான வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள். பகுதிதான் முக்கியம். காட்சிப் பொருளல்ல.


Svs Yaadum oore
ஜன 15, 2025 07:13

தனுஷ்கோடி ரயில் பாதையும் விடியல் சமூக நீதி மத சார்பின்மைக்கு எதிரானது ....ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 1964-ம் ஆண்டு துண்டிக்கப்பட்ட அகல ரயில்பாதையை சீரமைக்க 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.. ஆனால் விடியல் மதம் மாற்றிகள் அரசு 17.2 கி.மீ புதிய பாதை திட்டத்தை ஐந்தாண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளது. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17 கி.மீ., ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கோரி, ரயில்வே அமைச்சகத்துக்கு, தமிழகம் கடிதம் எழுதியுள்ளதாக மத்திய அமைச்சர்.. இந்த திட்டப் பகுதி சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்தது என்று மாநில அரசு மத்திய அரசு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளதாம் .....விடியல் ஆட்சியில் கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளாவுக்கு ஏற்றுமதி ...கேரளாக்காரன் அவன் மாநிலத்து மருத்துவ கழிவை இங்கே கொண்டு வந்து கொட்றான் ..அதெல்லாம் கேட்க வக்கில்லை ....ஆனால் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை சுற்று சூழல் பாதிப்பு என்று விடியல் மதம் மாற்றிகள் ..


Svs Yaadum oore
ஜன 15, 2025 07:05

தனுஷ்கோடியில் ராமாயண வரலாற்றை சொல்லும் அடையாளம் ராமரின் பிரம்மாண்ட சிலை, சிற்பங்கள், ஓவியங்கள் அமைக்கனுமா? இப்படியெல்லாம் விடியல் ஆட்சியில் நடக்கும் என்று கனவு காண்கிறார்களா? இதெல்லாம் விடியல் சமத்துவம் சகோதரத்துவம் மத சார்பின்மைக்கு எதிரானது ....இப்போது நடக்கும் ஆட்சி காலில் செருப்புடன் சமத்துவ பொங்கல் கொண்டாடும் ஆட்சி நடக்குது .... இங்கே சிரியா பிரச்சனைக்கு சமூக நீதி மத சார்பின்மையாக கவர்னருக்கு எதிராக மவுண்ட் ரோட்டில் மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவானுங்க ....அதனால் தனுஷ்கோடி ராமர் சிலை பற்றி கனவு காண வேண்டாம் ... அப்படி சிலை அமைப்பது விடியல் சமுகே நீதிக்கு எதிரானது ....


Sowmya Sundararajan
ஜன 15, 2025 06:00

மத்திய அரசு முன்வரும். மானில அரசு எப்படி முனவரும்?. இன்று வரை மேடைகளில் சனாதனத்தை மலேரியா, டெங்கு போல் அழிக்கவேண்டும் என புல்லுருவி கும்பலிடம் இதையெல்லாம் கேட்கலாமா? முதலில் மக்கள் திருந்தி ஒழுங்கீனங்களை அகற்றி, நல்லவர்கள் ஆட்சியில் அமரட்டும். தமிழகத்திற்கு அப்புறம்தான் விடிவுகாலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை