உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை அடக்குவதா?

 இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை அடக்குவதா?

பெண்கள் உள்ளிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் என்பது, தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதி. உரிய காலத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றா ததால், போராட்டத்திற்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்து பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக, காவல் துறையை கொண்டு அடக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது. சமீபத்தில், ஏழு நாட்களாக செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, காவல் துறையின் அணுகுமுறை ஏற்கத்தக்கது அல்ல. காவல் துறை, வருவாய்த் துறை, அரசு அதிகாரிகளில் ஒரு பிரிவினர் தி.மு.க., ஆட்சிக்கு எதிராக இருப்பரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. - சண்முகம் மாநில செயலர், மா-.கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Gajageswari
ஜன 01, 2026 10:23

எல்லா போராட்டங்களும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்


Nathansamwi
டிச 31, 2025 15:23

கூட்டணி ல இருந்து வெளில வரோம்னு சொல்ல தைரியம் இருக்கா உண்டியல் குலுக்கீஸ் ?


duruvasar
டிச 31, 2025 14:32

மீண்டும் மீன்டும் கொசு .


பாலாஜி
டிச 31, 2025 11:24

போராட்டம் செய்வதைவிட நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது நிரந்தர தீர்வு ஏற்படுத்தும்.


sundarsvpr
டிச 31, 2025 10:05

கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு காண இயலவில்லையானால் போராட்டங்களை தவிர்த்த ஏன் நேரிடையாக நீதிமன்றம் நாடி தீர்வு காணக்கூடாது? காவல்துறைக்கு தேவை அற்ற பணியினை தவிர்க்கலாம்.


kjpkh
டிச 31, 2025 10:01

மயிலிறகால் வருடி அரசுக்கு யோசனை சொல்கிறார் சண்முகம். இல்லையென்றால் பெட்டி வராதே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை