உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைவர்களின் சிலைகள் அகற்றப்படுமா?: ஐகோர்ட் எதிர்ப்பு

தலைவர்களின் சிலைகள் அகற்றப்படுமா?: ஐகோர்ட் எதிர்ப்பு

மதுரை : அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மற்றும் கொடிக்கம்பங்களை அவர்களின் சொந்த அலுவலகங்களில் நிறுவிக் கொள்ளலாம். பொது இடங்களில் அவற்றை நிறுவுவது ஏற்புடையதல்ல; அனுமதிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கோவில் குளக்கரை பகுதியில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில், ஆக்கிரமிப்பில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை, அ.தி.மு.க., கொடிக்கம்பத்தை அகற்ற தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்த போது, இவ்வாறு கண்டிப்புடன் தெரிவித்தது. இதனால், தெருவுக்கு தெரு வைக்கப்பட்டுள்ள கட்சித் தலைவர்களின் சிலைகள் அகற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திருவிடைமருதுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் முத்துக்கிருஷ்ணன் தாக்கல் செய்த மனு விபரம்: திருவாரூர் - குடவாசல் - கும்பகோணம் சாலை, நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில் குளக்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலை, அ.தி.மு.க., கொடிக்கம்பம், 35 ஆண்டுகளாக உள்ளன. இதனால், போக்குவரத்திற்கு எந்த இடையூறும் இல்லை.இந்த சிலை, கொடிக்கம்பம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை அகற்ற கும்பகோணம் உதவி கோட்ட பொறியாளர் நோட்டீஸ் அனுப்பினார். சிலை, கொடிக்கம்பத்தை அகற்றக்கூடாது என, கலெக்டர், கும்பகோணம் தாசில்தார், உதவி கோட்ட பொறியாளர், மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை கமிஷனர், சீனிவாச பெருமாள் கோவில் செயல் அலுவலர், நாச்சியார் கோவில் போலீசாருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். எம்.ஜி.ஆர்., சிலை, கொடிக்கம்பத்தை அகற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அப்போது, அரசு தரப்பு அளித்த பதிலில், 'பொது இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், 'அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலைகள், கொடிக்கம்பங்களை அவர்களின் சொந்த அலுவலகங்களில் நிறுவலாம்; பொது இடங்களில் நிறுவுவது ஏற்புடையதல்ல. அது எந்தக்கட்சி, இயக்கமாக இருந்தாலும் சரி; அனுமதிக்க முடியாது. இந்த மனுதாரருக்கு அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும்' என்றனர்.மனுதாரர் தரப்பில், மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை பதிவு செய்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.ஏற்கனவே பொது இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பத்தை அகற்ற, அரசுக்கு 12 வாரங்கள் கெடு விதித்துள்ளது ஐகோர்ட் கிளை. இந்நிலையில், ஐகோர்ட் கிளையின் இந்த உத்தரவால், இனி பொது இடங்களில் கட்சிகள் தங்கள் தலைவர்களின் சிலைகளை நிறுவ முடியாது. போக்குவரத்திற்கு இடையூறாக சிலைகள் அமையாது. ஏற்கனவே உள்ள சிலைகளும் அகற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

முருகன்
பிப் 21, 2025 20:57

இந்தியா முழுவதும் இருக்கும் சிலைக்கும் இது பெருந்துமா ஏனெனில் ஒரு தலைவரின் பெரிய சிலை ஒன்று உள்ளது


Vijay D Ratnam
பிப் 21, 2025 18:57

யாரை கேட்டுட்டு சிலை வைக்குறாங்க. பவர் கைல இருந்தா இஷ்டத்துக்கு சிலை வைப்பாங்களா. உச்சநீதிமன்றம் இதில் தலையிட வேண்டும். நடுத்தெருவில் அமைத்து இருக்குற அரசியல் தலைவர்களின் சிலைகளை உட்பட எல்லா சிலைகளையும் அப்புறப்படுத்த ஒரு உத்தரவு போடுங்க யுவர் ஆனர்.


பாலா
பிப் 21, 2025 18:39

ஸ்ரீரங்கம் கோபுர அருகில் உள்ள சொறியனின் சிலையை உடனே தெலுங்கன்கள் அகற்றாவிட்டால் தமிழர்கள் அகற்றுவார்கள்.


karupanasamy
பிப் 21, 2025 16:56

ராமசாமி ஏழை எளிய பாமர மக்களிடம் வெறுப்பு பேசினால் ஏமாற்றி அவர்களிடமிருந்து பறித்த சில்லறை காசுகளைக்கொண்டு சேர்த்த சொத்துக்களை அவர் தொடங்கிய அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரசுடைமையாக்கவேண்டும். அவராலும் அவருடைய கூலிப்படையினராலும் நிறுவப்பட்ட சிலைகளையும் சமூக விரோத கல்வெட்டுகளையும் இடித்து தள்ளி அகற்றவேண்டும்.ராமசாமியை ஈவேரா என்றோ பெரியார் என்றோ ஒருபோதும் குறிப்பிடாதீர்கள்.


ப.சாமி
பிப் 21, 2025 16:20

நீதிபதி எந்த ஊர் தெரியவில்லை.தமிழ் நாட்டு அரசியல் புரிதல் இல்லாமல் இருக்கிறார்....


orange தமிழன்
பிப் 21, 2025 15:11

எல்லா சிலைகளையும் அகற்ற வேண்டும்....முக்கியமாக ஈ வே ராமசாமி கடவுள் மறுப்பு சிலைகள்.....அதே போல ஏதாவது செய்து மெரினா கடற்கரையும்...........


Rajan A
பிப் 21, 2025 14:08

என்ன சொல்லி என்ன பிரயோஜனம்? நாங்க கண்டுக்காம நம்ம வேலையை கவனிப்போம்


Rengaraj
பிப் 21, 2025 12:28

இங்கு சிலைகள், கட்சி கொடி கம்பங்கள், கொடிகள் தேவை இல்லை. , மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து , அவை தலைவர்களின் மரியாதையை குறைக்கின்றன. கொடிகள் காற்றில் கிழிந்து தொங்குகின்றன. கம்பனிகளும், கொடிகளும் நிறம் மங்கி கட்சிக்கொள்கையை மறக்கச்செய்கின்றன. வாக்கு வங்கிக்காக, வோட்டு பிச்சைக்காக சிலைகளுக்கு மாலை போடுகிறேன், கொடி கம்பம் நடுகிறேன், கொடியேற்றுகிறேன், என்றெல்லாம் சொல்லி போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யும் அரசியல்வாதிகளின் அட்டூழியம் தாங்கமுடியவில்லை. இதில் கட்சிகளுக்குள்ளே தகராறு. போலீஸ் அனுமதி பிரச்சினைகள் எல்லாம் வருகிறது. எனவே சிலைகள், கட்சி கம்பங்கள், கொடிகள் ஆகியவை அந்தந்த கட்சி அலுவலகத்தில் வைத்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பொதுஇடத்தில் வைக்கக்கூடாது. நாடுமுழுவதும் பொதுஇடத்தில் வைக்கப்படவேண்டிய ஒரே கொடி நமது தேசியகொடி மட்டுமே. இருக்கும் கட்சி தலைவர்களின் சிலைகளையும் அகற்றி அந்தஅந்த கட்சி அலுவலகங்களிலோ அல்லது அந்த தலைவர்களின் வாரிசுகளின் வீட்டிலோ வைத்துவிடலாம். குறிப்பாக நிறைய இடங்களில் பெரியார் சிலை உள்ளது. அவற்றை பராமரிக்கும் விதமாக திராவிடக்கழக தலைவர் வீரமணியிடம் கொடுத்துவிடலாம். அல்லது பெரியார் பல்கலைக்கழகத்தில் கொண்டுபோய் வைத்துவிடலாம்.


Gopinath Anandakrishnan
பிப் 21, 2025 11:48

சிலையை ஸ்ரீரங்கம் கோபுர அருகில் உள்ளதே அதை முதலில் அகற்றவும்


Rajarajan
பிப் 21, 2025 11:45

தலைவர் சிலைகளை அகற்றினால், பாவம் காக்காய்களுக்கு தான் கஷ்டம்.