உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் வருமா ? தேர்தல் ஆணையம் விரைந்து தீர்வு காண உத்தரவு

இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் வருமா ? தேர்தல் ஆணையம் விரைந்து தீர்வு காண உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகழேந்தி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டில்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.2024 மார்ச் மாதம் அதிமுக கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கு முன்னதாக புகழேந்தி டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தேர்தல் ஆணையத்தில் கொடுத்த பல மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் அதை விசாரிக்காமல் முடிவெடுக்க கூடாது, விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.முழுவதுமாக கேட்டறிந்த நீதிபதி புதிதாக ஒரு மனுவை பெற்று அதை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார். புதிய மனுவும் புகழேந்தியால் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் மனுவின் மீது எடுக்கவில்லை. பின்னர் மூன்று முறை இதை நினைவு கூர்ந்து கடிதம் அனுப்பியும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. விசாரணையும் செய்யவில்லை. இதனை தொடர்ந்து டில்லியில் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் ஆணையர்கள் ஜானேஷ் குமார் , சுப்பீர் சிங் சாந்து ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு புகழேந்தியால் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், புகழேந்தி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sankaranarayanan
டிச 17, 2024 20:49

இரட்டை இலைகள் இனி இருக்கவே இருக்காது அதற்குப்பதில் ஒரு தாமரை இலை வந்துவிடும் எதோ ஓர் இலை அது எந்த இலையாக இருந்தால் என்ன தாமரை இலை கருகாது அதன்மிது தண்ணீரும் நிற்காது மலரை கொடுக்கும் இலை அதை அகற்றப்போனால் சல்லி வேரில் மாற்றிக்கொள்வார்கள் ஜாக்கிரதை


Rpalni
டிச 17, 2024 20:22

பத்துத் தோல்வி சீக்கிரம் கட்சிக்கு பால் ஊற்றி விடுவார். சின்னம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? தான் ஜெயிலுக்கு போகாமலிருந்தால் சரி


தாமரை மலர்கிறது
டிச 17, 2024 19:52

பிஜேபி தலைமையின் கீழ் எடப்பாடியின் அதிமுக வந்தால் மட்டுமே, ரெட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் முடக்கப்படும்.


sankaranarayanan
டிச 17, 2024 18:45

அம்மா இறந்ததும் இரட்டை இலை தண்ணீர் இல்லாமல் காய்ந்து ஓலையாகி போய்விட்டது அதன் காம்பும் கருகிவிட்டது இனி யாருக்குமே பயன்பாடாமல் போய்விட்டது கட்சிக்கு வேறு ஒரு சின்னம் பார்த்தாலே போதும்


Velan Iyengaar
டிச 17, 2024 12:25

எல்லாத்தையும் மேலே இருப்பவன் பாத்துக்குவான் அவன் விரலசைவில் அது அது தானாகவே நடக்கும்


சம்பா
டிச 17, 2024 12:14

இவன் கவனிக்க பட வேண்டியவன்


Perumal Pillai
டிச 17, 2024 12:06

செத்த கட்சியின் சின்னத்தையும் முடக்க வேண்டும் .இது ஒரு கட்சி. அதுக்கு கோமாளி ஒருவன் தலைவர் . விளங்கிடும் .


Raja Vardhini
டிச 17, 2024 11:55

ஓ.பி.எஸ். புகழேந்தி போன்ற பைத்தியங்கள் திருந்தவே திருந்தாதா? உடனடியாக கீழ்ப்பாக்கத்தில் சேர்க்க வேண்டும்..


GMM
டிச 17, 2024 11:43

தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்வதும், அதனை ஏற்று நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதும் மிக தவறான சட்ட விரோத முடிவு. அரசியல் சாசன அமைப்புகளை நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றால், நீதிமன்றத்தை - CAG - தணிக்கை செய்ய வேண்டும். நீதிமன்றம் போல் இனி தேர்தல் ஆணையம், கவர்னர்.. வழக்கறிஞர் மூலம் மனு பெற்று தீர்வு காண முடியும். தவறான கோரிக்கை மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.


சமீபத்திய செய்தி