உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / களத்தில் பணியாற்றுவோருக்கு பா.ஜ.,வில் பதவி கிடைக்குமா?

களத்தில் பணியாற்றுவோருக்கு பா.ஜ.,வில் பதவி கிடைக்குமா?

சென்னை:தமிழக பா.ஜ., மாநில பொறுப்புகளுக்கு, மேலிட தலைவர்கள் சிபாரிசு அடிப்படையில், ஏற்கனவே இருந்தவர்களே மீண்டும் நியமிக்கப்பட்ட நிலையில், கட்சியில் உள்ள 25 பிரிவுகளுக்காவது களப் பணியாற்றும் கட்சியினர் நியமிக்கப்படுவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

ஆன்மிக பிரிவு, வழக்கறிஞர் பிரிவு, மருத்துவர் பிரிவு, சமூக ஊடக பிரிவு உட்பட, 25 பிரிவுகள், பா.ஜ.,வில் உள்ளன. மாநில துணை தலைவர்கள், மாநில பொதுச்செயலர்கள், மாநில செயலர்கள் பதவிகளுக்கு, அந்த பதவிகளில் இருந்தவர்களே மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, பிரிவுகளுக்கு மாநில தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே, அந்த பதவிகளுக்கு, மூத்த தலைவர்கள் சிபாரிசு செய்பவர்களை நியமிக்கக் கூடாது. பல ஆண்டுகளாக களப்பணியில் ஈடுபட்டு வருபவரா என்பதை பார்த்து நியமிக்க வேண்டும். அப்போது தான், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு இணையாக, பா.ஜ.,விலும் பலமான நிர்வாகிகள் இருப்பர். ஒவ்வொரு பிரிவினரும் கட்சியில் புதிய உறுப்பினர் சேர்ப்பது போன்ற பணிகளில் உண்மையாக ஈடுபடுவர்; கட்சியும் வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை