உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்காவின் வரி விதிப்பு மோடி அரசை கவிழ்க்கவா?

அமெரிக்காவின் வரி விதிப்பு மோடி அரசை கவிழ்க்கவா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாம், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால், அந்நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து, உக்ரைன் போருக்கு நம் பணம் உதவி செய்கிறது என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகிறார். அதனால், அந்த இறக்குமதி மீது, 50 சதவீத வரி விதிக்கப் போவதாகக் கூறுகிறார். வரி விதிப்பதற்கு இந்தக் காரணம் உண்மை அல்ல. பொருளாதார வளர்ச்சியில் உலகளவில் நாம் நான்காவது இடத்தைப் பிடித்து விட்டோம்; தொடர்ந்து நம் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பது தான் பென்டகன் திட்டம். முதலில், 25 சதவீத வரி என்றவர், பின், கூடுதலாக 25 சதவீதம் போடப்படும் என்றார். நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சு நடத்திய பின், நம் மீதான கூடுதல் 25 சதவீதம் வரி விதிக்கப் படாது என்று சொல்கிறார். நம்பக்கூடியதாக இல்லை இவரது பேச்சு. ஏற்றுமதி ரஷ்ய எண்ணெயை, குஜராத்தில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில், டீசல், பெட்ரோல், எரிவாயுவாக மாற்றி, நாடு முழுக்க விநியோகிக்கிறது மத்திய அரசு. சில ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், ரஷ்யா - உக்ரைன் சண்டையால், ரஷ்யாவுக்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை.அமெரிக்க அதிபர் டிரம்ப், தன் நாட்டின் வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் 232வது பிரிவை பயன்படுத்தி, உலக நாடுகளின் மேல், பரஸ்பர வரி போட்டு உள்ளார். இந்த வரி விதிப்பால், தன் தே சிய பாதுகாப்பு உறுதிப்படும் என்று டிரம்ப் நம்பி னாலும், வெள்ளை மாளிகை சார்ந்த பொருளாதார நிபுணர்கள், 'அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள், ஜவுளிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர் உபரிகள், உயிர் காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடு ஏற்பட்டு, அமெரிக்காவில் விலைவாசி உயரும்' என்கின்றனர். அந்நாட்டின் பொருளாதார சரிவுநிலை, இரண்டாம் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி, 3 சதவீதம் எனக் கூறப்படுகிறது. கடந்த மாத வேலையின்மை நிலை 4.2 சதவீதமாக உள்ளது. சுகாதாரத் துறையிலும், சமூக பாதுகாப்பு துறையிலும் செலவினங்கள் அதிகமாகி, தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. பல பில்லியன் டாலர்கள் வருவாய் குறைந்து, நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு, 1.6 ட்ரில்லியன் டாலர்கள் என்ற நிலையில் உள்ளது. அமெரிக்க பொருளாதார சரிவுக்கு மற்றொரு காரணம், ராணுவ தளவாடங்களை, உக்ரைனுக்குக் கடனாகக் கொடுத்து, அவை அனைத்தும் அழிந்து விட்டதே! பாகிஸ்தானின் முலோபாயம், இந்தியாவை அழிப்பது அல்லது தொல்லை கொடுப்பது ஆகியவை தான். ஆப்பரேஷன் சிந்துாருக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு முறை வாஷிங்டன் சென்று, டிரம்பைச் சந்தித்தார். பயங்கரவாதத்தையும், தலிபான் தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்துவதற்காக, சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்., நிதியுதவி அளிக்கிறது என்று கூறப்பட்டாலும், இந்தியாவை அழிப்பது தான் அதன் குறிக்கோள். பாதிப்பு நான்கு முறை நம்மிடம் தோற்றாலும், அதைத் துாண்டிவிட்டு, நமக்கெதிராக போரிட வைப்பது அமெரிக்கா தான் என்று, போரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலு ம், வர்த்தகப் போரை உருவாக்கி, இந்திய பொருளாதாரத்தைச் சீரழித்து, நம் பிராந்தியத்தில் ஆபத்தான சூழலை உருவாக்குவது தான் அமெரிக்கா வின் குறிக்கோள். அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பால், இந்தியாவில் ஏற்படக் கூடிய பொருளாதார தாக்கங்கள்: இங்கிருந்து ஏற்றுமதியாகும், நகைகள், வைரங்கள், விலை உயர்ந்த கற்கள், ஜவுளிகள், சில இயந்திரங்கள், பொருள் களின் ஏற்றுமதி, 30 முதல் 35 பில்லியன் டாலர்கள் பாதிப்பை சந்திக்கும். பண மதிப்பு குறைந்து, பொருள்களின் விலைகள் உயரக் கூடும். அமெரிக்காவின் அடுத்த கட்டளை, அவர்களின் விவசாயப் பொருட்களான அரிசி, பருப்பு, மக்காச்சோளம், சர்க்கரை, அசைவ பால், தயிர், மாமிசம் ஆகியவற்றை நாம் இறக்குமதி செய்ய வேண்டும் என்பது தான். இப்படிச் செய்வது, நம் விவசாயிகளை தற்கொலைக்குத் துாண்டுவதற்கு சமம். விவசாய ரீதியாக தன்னிறைவு அடைந்துள்ளது நம் நாடு. 140 கோடி நுகர்வோர் கொண்ட நாடு நம்முடையது. இத்தகைய மாபெரும் சந்தையில், தன் பொருட்களைத் திணிக்கப் பார்க்கிறது அமெரிக்கா. பல ஆண்டுகளுக்கு முன் இங்கே நுழைந்த கோககோலாவும், பெப்சியும், நம் உள்நாட்டு தயாரிப்புகளான, காளிமார்க், கோல்ட் ஸ்பாட் ஆகிய காற்றுாட்டப்பட்ட பானங்களுக்கு மூடுவிழா நடத்தி விட்டன. இந்த ஒரு பாடம் நமக்குப் போதாதா? அமெரிக்காவின் தந்திரத்தை அறிந்து கொண்ட நம் பிரதமர் மோடி, 'நீ வேண்டாம் போ' என்பது போல், இங்கிலாந்துடன், 'ப்ரீ டிரேடு' வர்த்தக ஒப்பந்தம் போட்டு விட்டார். இதனால், இங்கிலாந்து மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு, நம் பொருட்கள் எளிதில் சென்றடையும். இது போல், பல நாடுகளை நாம் அணுகலாம். சவுதி அரேபியா, இஸ்ரே ல், சிரியா, லெபனான், ஓமன், பக்ரைன், எகிப்து, குவைத், இந்தோனேஷியா, புருனை, தாய்லாந்து, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேஷியா, தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், மெக்சிகோ, கொலம்பியா, கியூபா மற்றும் ஆப்ரிக்க நாடுகள் உள்ளன. இவற்றைத் தொடர்பு கொண்டு நம் வர்த்தகத்தை வளர் த்தால், அமெரிக்காவால் என்ன செய்து விட முடியும்? இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் பீப்பாய் எண்ணெயை நிறுத்தினால். இந்தியாவில் விபரீத விளைவுகள் ஏற்படும். ஐந்து ஆண்டுகளாக, பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் கட்டுக்குள் உள்ளன. தடை ஏற்பட்டால் என்னாகும் என யோசித்துப் பாருங்கள்!

அமெரிக்காவுடன் மோதினால் ஆபத்து ஏற்படுமா?

புவிசார் அரசியலில் வரலாற்றுப் பக்கங்களை பின்னோக்கி பார்த்தால், இந்த உண்மை வெளிச்சத்துக்கு வரும். தேர்தல் முறைகேடு அமெரிக்கா, இந்தியாவை என்றுமே நட்பு நாடாக கருதியது கிடையாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், ரஷ்யாவுடன் நெருக்கம் காண்பிக்கிறார் என்று, இந்தியா - பாகிஸ்தான் போரைத் துாண்டிவிட்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது அமெரிக்கா. வங்கதேச போரின்போது, அந்நாட்டுக்கு ஆதரவாக, அமெரிக்க விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்கின. ஈராக்கில், சதாம் உசேனை கவிழ்த்து, நாட்டை நாசமாக்கியது அமெரிக்கா. சிரியாவில் மூன்று தீவிரவாத குழுக்களை துாண்டிவிட்டு, அரசுக்கு எதிராக உள்நாட்டு சண்டையை உருவாக்கி, ஆட்சியைக் கவிழ்த்ததும் அமெரிக்கா தான். லிபியாவில் ஆட்சி புரிந்த முகமது கடாபியை விரட்டி அடித்ததும் அமெரிக்கா தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானில் தேர்தல் முறைகேடு, ஊழல் என்று கூறி, இம்ரான் கான் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளையும், மாணவர்களையும் துாண்டிவிட்டு, ஆட்சி கவிழ்ந்த பின்புலத்தில் அமெரிக்கா தான் இருந்தது. வங்கதேச பிரதமர் அசீனாவை, தேர்தல் முறைகேடு என்று கூறி, வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்த இளைஞர்களை சமூக விரோதிகளாகத் துாண்டிவிட்டு, உள்நாட்டு கலவரத்தைக் கட்டவிழ்த்தது அமெரிக்கா தான். தற்போதைய, 'கேர்டேக்கரே' இதற்கு சாட்சி! இன்று நம் நாட்டில், வாக்கா ளர் பட்டியலில் குளறுப டி என்று எதிர்க்கட்சிகள் போராடுவது, அவர்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகைகள் சதி செய்து உதவுவது என்ற விஷயங்கள் எல்லாம் எப்படி நடக்கிறது? உலகில் உள்ள அரசுகளை கவிழ்ப்பதற்கு என்றே அமைக்கப்பட்ட, ஓ.சி.சி.ஆர்.பி., என்ற குழு, அமெரிக்கா வில் செயல்படுகிறது. இது, பல்லாயிரம் கோடி டாலர்களை நிதியாக கையிருப் பு வைத்திருக்கும் இயக்கம். 'ஊழல் புரியும் அரசியல்வாதிகள்' என்று கூறி, தனக்கு வேண்டாத நாட்டின் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டத்தை உண்டாக்கி, அரசை கவிழ்ப்பது தான் ஓ.சி.சி.ஆர்.பி.,யின் வேலை. இதற்கு உறுதுணையாக உள்நாட்டு அரசியல்வாதிகள், எதிர்க்கட்சிகள், வேலையில்லா இளைஞர்கள் - மாணவர்கள் சேர்ந்து கொள்வர். அமெரிக்காவில் தன்னார்வ அமைப்பு நடத்தி வரும், ஜார்ஜ் சுராஜ் என்பவர், அமெரிக்க பங்குச்சந்தையில் பிரபலமானவர். நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில், பல நாட்டு அரசியல்வாதிகளின் கருப்பு பணம் எல்லாம் முதலீடு செய்யப்படுகிறது. நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இதில் முதலீடு செய்வது அத்துப்படி. இந்த முதலீட்டு பணத்தில் வரும் லாபத் தொகையை, அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கும், தேர்தலுக்காகவும் பயன்படுத்துகின்றனர். நம் டில்லி பப்புவும், தமிழ்நாட்டு அப்புவும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூறப்படுகிறது. நம் நாட்டில், நீண்ட நாளாக நடந்த விவசாயிகளின் போராட்டத்தில், இவர் களின் பங்கு அளப்பரியது. உள்நாட்டு தன்னார்வ தொண்டு அமைப்பிற்கு, மேல்நாட்டு தன்னார்வ தொண்டு அமைப்புகள் அளவற்ற நிதியை வாரி வழங்குகின்ற ன. விவசாயிகளும், போராட்டம் என்று கூறிக்கொண்டு, 'ஏசி' கூடாரங்களும், 'ஏசி' சமையலறைகளும் அமைத்து, பல மாதங்கள் சொகுசாக சாப்பிட்டு அளவளாவினர். இவ்வ ளவு எதிர்ப்புகளுக்கு இடையே, நம் அரசைக் கவிழ விடாமல் பாதுகாப்பது நம் கடமை. உள்நாட்டு ஊழல் வாரிசுகளை வளர்க்கும் அரசியல்வாதிகளை மக்கள், ஓட ஓட விரட்ட வேண்டும். குணப்படுத் த முடியாத வியாதிகளை கொண்ட அரசியல்வாதிகள், இறுதிவரை பதவியை விட்டுத்தர மனமில்லாதவர்கள். அப்புறப்படுத்துவோம் அவர்களை; அப்போது தான், நம் வாரிசுகள், கல்வியில் மட்டும் கவனம் செலுத்தி, எதிர்கால வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்! - பேராசிரியர் டாக்டர் எஸ்.அர்த்தநாரி -- டாக்டர் எஸ்.ஏ.ஹார்ட் கிளினிக், ராயப்பேட்டை, சென்னை. போன்: 9884353288


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Barakat Ali
ஆக 18, 2025 13:54

டீம்காவும் சவுண்டு உடுறதைப் பார்த்தா அப்படித்தான் தோணுது .......


Barakat Ali
ஆக 18, 2025 11:49

பலர் அறிந்த விஷயங்கள்தாம் இவை ....


Chanakyan
ஆக 17, 2025 21:13

Excellent article


Balasubramaniam
ஆக 17, 2025 20:46

1950 ஆம் ஆண்டு Food for peace என்கிற திட்டத்தில் கோதுமையுடன் பார்த்தீனியம் விஷ செடி விதைகளை கலந்து அனுப்பி 75 ஆண்டுகளாக இந்தியாவின் பல பகுதிகள் விவசாயம் செய்ய முடியாமல் செய்த துரோகி அமேரிக்கா . இதனை சீமை பூடு என்றும் சொல்வார்கள்


ManiMurugan Murugan
ஆக 17, 2025 19:10

உண்மை அருமையான பதிவு அமெரிக்காவிற்கு வல்லரசு என்ற பெயரை தக்க வைத்துக் கொள்ள பிரச்சனைகளை தூண்டிவிடுகிறது இந்து நாடுகளாகிய பாரதம் இந்தோனேஷியா மீது வேண்டும் என்றே போர்களை தூண்டுவது அமெரிக்கா தான் குள்ளநரித்தனம் இதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 17, 2025 18:37

அது தானாகவே நடந்தேறும்.


kannan
ஆக 17, 2025 14:44

போட்டோ சூட்க்காக மட்டும் ஊர் சுற்றிக் கொண்டுருந்தால் இப்படி நடக்காமல் எப்படி நடக்கும் ஆபீசர்?


vivek
ஆக 17, 2025 16:57

அறிவிலி கண்ணன், உன் டிரெசுக்கும் உன் அறிவுக்கும் சம்பந்தம் இருக்கா


Anandhan
ஆக 17, 2025 14:03

Excellent write up, Dr. Prof. Arthanari, congratulations. Looking forward to similar articles with substance from Dinamalar.


venugopal s
ஆக 17, 2025 13:34

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தான் தெரியும் என்று சொல்வார்கள்!


vivek
ஆக 17, 2025 16:58

அப்படி பேயாக தெரிந்தால் அப்பல்லோ போய் அட்மிட் ஆயிடு வேணு


venugopal s
ஆக 17, 2025 17:36

உனக்கு தினமும் என் பின்பக்கத்தை முகர்ந்து பார்க்காவிட்டால் தூக்கமே வராதோ?


vivek
ஆக 17, 2025 19:03

ரொம்ப தீஞ்சு போய் இருக்கு....எப்படியும் ஒரு கிலோ பர்னால் நீ தடவனும்.. ஹி.. ஹி


Shivakumar
ஆக 18, 2025 03:01

இதை ராகுல் காந்திக்கு சொல்லுங்க சார். அவர்தான் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கின்றார்.


Sri
ஆக 17, 2025 12:42

மக்கள் தனி ஒருவராக முடிந்த வரை டாலரில் வாங்கிய பொருளை குறைவாக உபயோக படுத்துவேண்டும். உள்நாட்டு பொருளை மட்டுமே முடிந்த வரை வாங்க வேண்டும். அத்தியாவசிய தேவை மட்டுமே எரிபொருளை உபயோகித்தால் நாடு குறைவாக டாலர் செலவழித்து அவற்றை இறக்குமதி செய்யும்