உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காற்றாலை மின் உற்பத்தி 22 மெகாவாட்டாக சரிவு

காற்றாலை மின் உற்பத்தி 22 மெகாவாட்டாக சரிவு

தமிழக மின் உற்பத்தி அமைப்புகள், மத்திய மின் தொகுப்பு மூலம், 19,065 மெகாவாட் மின்சாரம் வினியோகம் செய்ய முடியும். இதில் 9150 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள் மூலம் தென் மேற்கு பருவகாற்று சீசனில் 3500 முதல் 4500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.தற்போது பருவ காற்று சீசன் முடிந்து வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதால் காற்றின் வேகம் குறைந்துள்ளது. அதற்கேற்ப நேற்று முன்தினம் 84 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, நேற்று 22 மெகாவாட்டாக சரிந்தது. தமிழக மின்நுகர்வு நேற்று 15,946 மெகாவாட்டாக இருந்தது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ