உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் வாபஸ்: அறிவித்தது வானிலை மையம்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் வாபஸ்: அறிவித்தது வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெற்றுக் கொண்டது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாளை அதிகாலை சென்னைக்கு அருகே நெல்லூர் - புதுச்சேரி இடையே கரையை கடக்க உள்ளது. அப்போது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் எனக்கூறிய வானிலை மையம் அதற்கான ரெட் அலர்ட் விடுத்து இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1polt1ar&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இந்த 4 மாவட்டங்களிலும் விடுக்கப்பட்ட அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை மையம் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை

இன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை

அதேபோன்று, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

கடல் சீற்றம்

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் என பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் எச்சரித்து உள்ளது. கடலோர பகுதிகளில் நாளை 5:30 மணி வரை கடல் சீற்றம் 1.5 முதல் 2.0 மீ., வரை ருக்கும் எனவும், கன்னியாகுமரியில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Constitutional Goons
அக் 16, 2024 23:50

எல் நினோ அது இது என்று காரணம் கூறாமல், இப்போதாவது. இயற்கையை யாராலும் கணிக்கமுடியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் விஞ்ஞானம் என்ற பெயரில் சடுகுடு விளையாட்டு விளையாடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் .


RAAJ68
அக் 16, 2024 23:19

வானிலை அறிக்கையில் ஏகப்பட்ட குளறுபடி எதையும் சரியாக கணிக்க தெரியவில்லை தேவையில்லாமல் நேற்று முழுவதும் மக்களை பீதியில் போட்டு விட்டனர். இவர்கள் கொடுக்கும் வானிலை அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை. சென்னைக்கு ரெட் டாலருக்கு இல்லை என்று சொன்னவர்கள் இன்று காலை மறுபடியும் சென்னைக்கு ரெட் அலர்ட் என்ற செய்தியை விட்டனர். மக்களுக்கு எதை நம்புவது என்று புரியாமல் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று வானிலை அறிக்கையை இனிமேல் பொருட்படுத்த வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை