உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊடகங்கள் இல்லையெனில் மக்களாட்சி மாண்டுவிடும்

ஊடகங்கள் இல்லையெனில் மக்களாட்சி மாண்டுவிடும்

சென்னை: 'ஊடகங்கள் இல்லையெனில், மக்களாட்சி இருளில் மாண்டு விடும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உலகப் பத்திரிகை சுதந்திர நாளையொட்டி நேற்று, முதல்வர் வெளியிட்டுள்ள பதிவு:ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் இடம் 151 என, படுபாதாளத்தில் உள்ளது. மத்திய பா.ஜ., அரசு கேள்விகளைக் கண்டாலே அஞ்சுகிறது. ஊடக அலுவலகங்களில் சோதனை நடத்துகிறது; செய்தியாளர்களை சிறையில் தள்ளுகிறது; பா.ஜ., அரசின் ஊழல்கள், உரிமை மீறல்கள் மற்றும் பெரும்பான்மைவாத போக்கை அம்பலப்படுத்துவோர்களை அடக்குகிறது.உலகப் பத்திரிகை சுதந்திர நாளான இன்று, யாருக்கும் அஞ்சாத ஊடகவியல் இல்லையென்றால், மக்களாட்சி இருளில் மாண்டு விடும் என்பதை, நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வோம். அதனால்தான், பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பது என்பது, ஊடகங்களுக்காக மட்டும் அல்ல; குடிமக்கள் அனைவரின் கேள்வி கேட்கும் அதிகாரத்தை நோக்கி, உண்மையை உரைக்கும் உரிமைக்கானதாக ஆகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
மே 04, 2025 08:52

கலைஞரின் தவப்புதல்வன் தமிழக உதல்வர் கூறிய கருத்து உண்மை. ஆனால் அனைத்து பத்திரிக்கைகளுக்கு இது பொருந்தாது . சுமார் 90 சதவீதம் பத்திரிகைகள் பணம் வாங்கிக்கொண்டு செய்திகளை வெளியிடுகிறது. பத்திரிகைகள் உங்களது நடுநிலைமை தேவை


சமீபத்திய செய்தி