உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; இரண்டாம் கணவர் கைது!

பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; இரண்டாம் கணவர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த பெண்ணை தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது இரண்டாம் கணவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் வசிக்கும் பாலன் மனைவி சரண்யா, 35, நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 வயதில் சாமுவேல் என்ற மகனும், 13 வயதில் சரவணன் என்ற மகனுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=htm37v41&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2021ல் சண்முக சுந்தரம் என்பவர் இறந்துவிட்ட நிலையில், சரண்யா பட்டுக்கோட்டை தாலுகா, கழுகபுலி காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன், 45, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதய சூரியபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர். நேற்று இரவு பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் ஆகியோர் கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று உள்ளனர். சரண்யா கடையை பூட்டி விட்டு கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சரண்யா வீட்டிற்கு செல்லும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்து மற்றும் தலையின் பின்பக்கத்தில் வெட்டப்பட்டதால் தலை துண்டானது. இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சரண்யா, பா.ஜ., கட்சியில் நிர்வாகியாக இருந்தவர் என்பதால், அந்த கட்சியின் முன்னணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.துப்பு துலங்கியதுஇந்நிலையில் கொலைக்கான காரணம் பற்றி விசாரித்த போலீசார், சரண்யாவின் இரண்டாம் கணவருக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர். அவரது பெயரில் இருந்த 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான இடத்தை, தன் முதல் மனைவியின் மகன் கபிலனுக்கு பாலன் எழுதி வைத்தார்.இதற்கு சரண்யா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பாலன், தன் முதல் மனைவியின் மகன் கபிலன், அவரது நண்பர்கள் குகன், பார்த்திபன் உதவியுடன் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாலன் உட்பட நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.அமைச்சர் கார் மீது செருப்பு வீசியவர்சரண்யா மதுரையில் வசித்தபோது பாஜ கட்சியில் பொறுப்பில் இருந்துள்ளார். அரசியலில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வந்த சரண்யா, அமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

Natchimuthu Chithiraisamy
மே 10, 2025 12:34

குழந்தைகளை வைத்துக்கொண்டு பெண்கள் திருமணம் செய்வது அந்த குழந்தைகளுக்கு எப்படி மற்றவனை அப்பா என்று ஏற்றுக்கொள்வது என்பது புரியவில்லை. இந்த செய்தி புரிய வைக்கிறது.


KRISHNAN R
மே 07, 2025 08:46

இந்த ஆண் திருமணம் செய்து ஏமாற்ற வித்தை செய்துள்ளான்


Kasimani Baskaran
மே 07, 2025 03:56

மதுரையில் வெட்டுவது ஒரு வகை பேஷன். இதை ஒரு கதை போல, மின்னல் வேகத்தில் ஒரே நாளில் துப்புதுலக்கிய ஏவல்த்துறை ஆச்சரியப்பட வைத்து விட்டது. மாடல் ஆட்சி என்றால் அது மாடல் ஆட்சிதான். பாஜக ஏதாவது குற்றம் செய்ததா என்றால் இல்லை - முன்னாள் தலைவி என்ற ஒரே காரணம். அந்த சாருடனான தொடருப்புக்கும் சாருக்கும் தொடர்பு கிடையாது என்று சொன்னததையும், போதைப்பொருள் கடத்தி புகழ்பெற்ற அயலக அணி விவகாரங்களையும், தீவிரவாதிகள் தாராளமாக பெரிய காஸ் சிலிண்டரில் குண்டு வைத்ததையும் ஒப்பிட்டால் - பாஜக என்ற பெயரை இங்கு இழுப்பது மகா கேடித்தனம்.


Matt P
மே 07, 2025 01:09

பிரச்னைகளை கையாளும் போது கவனமா கையாள வேண்டும். கோபமும் ஆத்திரமும் எந்த நியாயத்தையும் ஏற்படுத்தி விடுவதில்லை.


Matt P
மே 07, 2025 01:07

தனியா இரவில் நடக்க விட்டு கொன்னுட்டான். பிள்ளைகளுக்காவது அம்மா தனியா இரவில் நடக்க கூடாது என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும்.


NACHI
மே 06, 2025 22:52

அடுத்து அவன் பையன் வெட்டுவான்...இது தொடரும்...


GMM
மே 06, 2025 20:30

பிரச்னை எதுவானாலும் உயிர் பயம் இருந்தால், பெண்ணை இப்படி படுகொலை செய்ய மாட்டார்கள். வழக்கும் வாழ்வும் ஒரே நேரத்தில் முடியும் நிலை. திராவிட குறுக்கீட்டினால் போலீஸ் பயப்படும் காலம். அல்லது குற்றவாளிகள் துணியும் காலம். வழக்கில் தூக்கு அரிதிலும் அரிது. மோசடி நபர் சட்டத்தை கையில் எடுத்தால், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சம் நிலை அடையும். கால போக்கில் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது ?


தமிழ்வேள்
மே 06, 2025 20:20

ஒரேநாளில் துப்பு துலக்கி துலக்கி கொலையாளி என்று ஒருவனை பிடித்த போலீஸுக்கு, ஏன் மற்ற கேஸ்கள், குறிப்பாக தாகி கொலை ராமஜெயம் கொலை, திருபுவனம் ராமலிங்கம் கொலைகளில் யாரையும் புடிக்கும் வக்கு இன்றி சிபிஐ க்கு தேவை மாற்ற மண்டையை ஆட்டியது...?


sankaran
மே 06, 2025 20:04

ஒழுக்கம் ஓம்பப்படும்... ரெண்டு பேரும் இரண்டாவது கல்யாணத்தை தவிர்த்திருக்கலாம்... அல்லது முன் யோசனையாக உயில் எழுதி விட்டு கல்யாணம் செய்திருக்கலாம்...


venugopal s
மே 06, 2025 20:03

ஒன்று பாஜகவுக்கு வந்த பிறகு சட்ட விரோதமான செயல்களில் தைரியமாக ஈடுபடுவார்கள் அல்லது சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு விட்டு அதிலிருந்து தப்பிக்க பாஜகவில் சேர்வார்கள்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை