உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜல்லி கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி

ஜல்லி கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலுார் ஆர்பட்டி பகுதியில், தர்ம சாஸ்தா கோவில் சார்பில், கானாற்று நீரோடை பகுதியில் பக்தர்கள் நடந்து செல்ல, தடுப்பு சுவர் அமைக்கும் கட்டுமான பணி நடக்கிறது.குடியாத்தம் அடுத்த, மீனுார் மலை பகுதியைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ராஜேஷ்குமார் மற்றும் ஒன்பது பேர் நேற்று கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டனர். பின், சுத்தம் செய்யும் பணியில் இயந்திரம் சுற்றிக் கொண்டிருந்தபோது, மீனுார் மலைப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி தேவயானி, 58, அந்த இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ