உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிருக்கு காங்கிரசில் மரியாதை இல்லை

மகளிருக்கு காங்கிரசில் மரியாதை இல்லை

ஓட்டு திருட்டுக்கு எதிராக, மகளிர் காங்., சார்பில், 3 லட்சம் கையெழுத்து பெற்று கொடுத்திருக்கிறோம். மாவட்ட வாரியாக பூத் கமிட்டிகளை அமைத்துள்ளோம். ஆனால், தமிழக காங்.,கில், கட்சி மேடைகளில் கூட, மகளிர் காங்., நிர்வாகிகளுக்கு இருக்கை ஒதுக்குவதில்லை. குஷ்பு, விஜயதரணி போன்றோர், காங்.,கில் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, பா.ஜ.,விற்கு ஓட்டம் பிடித்து விட்டனர். நான் இன்னும் கவுன்சிலர் கூட ஆகவில்லை. அரசியலில் சம்பாதிக்க நினைத்திருந்தால், திராவிட கட்சிகளுக்கு சென்றிருப்பேன். காங்., கொள்கை, கோட்பாட்டை ஏற்று, சொந்த பணத்தை இழந்து, உழைக்கும் எங்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை. வரும் சட்டசபை தேர்தலில், மகளிருக்கு, 33 சதவீத இடங்களை வாங்கியே தீருவோம். வாரிசு அரசியலை ஓரங்கட்டிவிட்டு, உழைக்கும் மகளிருக்கு தொகுதிகளை ஒதுக்குமாறு, டில்லி மேலிடத்தை வலியுறுத்துவோம். - ஹசீனா சையது தலைவி, தமிழக மகளிர் காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !