உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

தமிழக அரசு, பயிர் காப்பீட்டு திட்ட தேதியை, நவ., 30 வரை நீட்டிக்க வேண்டும். தி.மு.க., அரசின் மீது விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். தி.மு.க., தோல்விக்கு விவசாயிகள் அடித்தளமாக இருப்பர். கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை, போதைப்பொருள் என தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது. இதற்கு, முற்றுப்புள்ளி வைக்க முடியாமல், தி.மு.க., அரசு திணறுகிறது. கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவமே, இதற்கு உதாரணம். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; இந்த ஆட்சிக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைப்பர். பிழையற்ற வாக்காளர் பட்டியல்தான், நியாயமான தேர்தலுக்கு வழிவகுக்கும். ஓட்டுத் திருட்டு நடக்கக்கூடாது என்பதற்காகவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடக்கிறது. ஆனால், இண்டி கூட்டணியினர், அவர்கள் வெற்றி பெற்றால், தேர்தல் கமிஷன் பணியை சரி எனவும், தோல்வியடைந்தால் சரியல்ல எனவும் கூறுவது வேடிக்கை. - வாசன், தலைவர், த.மா.கா.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ