உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அலைக்கழிக்கப்படுவதாக பெண்கள் குமுறல்

அலைக்கழிக்கப்படுவதாக பெண்கள் குமுறல்

திண்டுக்கல் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், ஆக., 14 க்குள், 112 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், நேற்று முகாம் நடந்தது. இதில், பெண்கள் கூட்டம் அலைமோதியது. மகளிர் உரிமைத்தொகைக்காக ஏராளமான பெண்கள் விண்ணப்பித்தனர். ஆனால், அதிகாரிகள் ஆட்களை பார்த்து மனுக்கள் பெற்றதுடன், கவுன்சிலரின் பரிந்துரை இருந்தால் தான் விண்ணப்பத்தை ஏற்கிறார்கள். இல்லையென்றால் விரட்டி விடுகின்றனர் என்று, மனு அளித்த பெண்களில் சிலர் குற்றஞ்சாட்டினர். அவர்கள் கூறியதாவது: குறிப்பிட்ட வார்டு மக்கள் மட்டுமே, மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கும் இம்முகாமில் பங்கேற்க முடியும். பிற வார்டுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது எனக்கூறி, எங்களில் பாதி பெண்களை விரட்டினர். மகளிர் உரிமைத்தொகைக்கு சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே விண்ணப்பத்தை ஏற்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ