உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ள நிவாரணம் கோரி போராட்டம்; கடலுார், விழுப்புரத்தில் பெண்கள் கைது

வெள்ள நிவாரணம் கோரி போராட்டம்; கடலுார், விழுப்புரத்தில் பெண்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s61mckor&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்மையில் தமிழகத்தை தாக்கிய பெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொண்ட தமிழக அரசு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை அடிப்படையில் ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது.இந்நிலையில், தங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை எனக் கூறி, விழுப்புரம் மாவட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமந்தூர், உப்புவேலூர், கிளியனூர், வடசிறுவலூர், ஆதனப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இன்று (டிச.,16) திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், நீண்ட வரிசைக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நிவாரணத்தைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பின்பு போராட்டம் கைவிடப்பட்டது. அதேபோல, கடலூர் சன்னியாசிபேட்டையிலும் ரூ.2000 வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைந்து போகச் சொல்லியும் கேட்காத அவர்களை, வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே பலர் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களையும் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.அதேவேளையில், தென்பெண்ணை ஆற்றின் கரையை பலப்படுத்தக்கோரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 16, 2024 14:32

அவரை வெளியேற்றி விட்டு...


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 16, 2024 14:26

தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகும். வீடுகளில் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்துக்கு சராசரியாக கணக்கிடும்போது கட்டணம் ரூ.113ஆகும். இந்த சராசரி கட்டணத்தோடு ஒப்பிடும்போது மும்பை 100 யூனிட்டுக்கு ரூ.643 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மும்பையில் ஒரு விசித்திரம் என்னவென்றால், அதானி ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643, டாடா நிருவாகத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரம் ரூ.524, மும்பை பிரிகான் எலக்ட்ரிசிடி மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.488. ராஜஸ்தான் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.833 மராட்டிய மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.668 உத்தரப் பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.693 பிஹாரில் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.684 மேற்கு வங்க மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.654 கர்நாடக மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.631 மத்தியப் பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643 ஒடிசா மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.426 சத்தீஸ்கர் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.431


hari
டிச 16, 2024 16:48

அந்த அதானி கமிஷன் எவளோ சொல்லிடு


ஆரூர் ரங்
டிச 16, 2024 16:57

அங்கெல்லாம் தடையின்றி சரியான மின்னழுத்தத்தில் மின்சாரம் கிடைக்கிறது. இங்கு? உண்மையில் மின்வாரிய கடன் விண்ணைத்தாண்டிச் செல்கிறது. அதையும் நாம்தான் வட்டியுடன் செலுத்த வேண்டும். ஊழல் குறையாத வரை இங்கு பாதிப்பு குறையாது. மின்மாற்றி டெண்டர் ஊழல் மட்டும் 100 கோடி காலி?


visu
டிச 16, 2024 20:18

100 யூனிட் மின்சாரத்துக்கு குறைவாக பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கலாம் .மற்றவர்களுக்கு இலவசத்தை நீக்கி கட்டண விகிதத்தை குறைக்கலாம் இதுபோன்ற நியாமான சீர்திருத்தங்கள் தேவை


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 16, 2024 14:21

இந்த பெண் போலீஸ் பார்த்தல் பாண்டிச்சேரி போல


Rpalni
டிச 17, 2024 05:39

த்ரவிஷன்களுக்கு நிர்வாக அறிவு துளியும் கிடையாது. நிதி நிர்வாகம் சுத்தமாக தெரியாது. சுரண்டி வயிறு/வாரிசு வளர்ப்பது கொள்ளையடித்து சொத்துக் குவிப்பது மிக நன்றாக தெரியும்


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 16, 2024 14:20

விடுங்கள் தேர்தல் நேரத்தில் 4000 கொடுத்து வெற்றி பெற்று விடலாம் இல்ல மோடி போல EVM கை வைக்க வேண்டியது தான்


sridhar
டிச 16, 2024 15:22

EVM என்றால் கிலோ எவ்வளவு தெரியுமா , அதன் விரிவாக்கம் தெரியுமா , அதை tamper பண்ண முடியாது தெரியுமா .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை