உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று முதல் வீடு வீடாக மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம்

இன்று முதல் வீடு வீடாக மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை சேர்க்க, வீடுதோறும் விண்ணப்பம் வழங்கும் பணி இன்று துவங்க உள்ளது.'மாநிலம் முழுதும் உள்ள மகளிருக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்' என, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதன்படி, இத்திட்டத்தில் சேர, 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். பயனாளிகளை தேர்வு செய்ய, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், 1.06 கோடி பேருக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்படாதவர்கள் அதிருப்தி அடைந்தனர்.இதையடுத்து, விண்ணப்பங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, தற்போது 1.15 கோடி பேருக்கு, மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.எனினும், தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.இதற்காக, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், மூன்று விதிமுறைகளில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறும் குடும்ப பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை இனி கிடைக்கும். இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய முதியோர் ஓய்வூதியம், அரசு ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், திட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதையடுத்து, புதிய பயனாளிகளை அடையாளம் காண, இன்று முதல் வீடு வீடாக விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன. இதற்கான பணியில் ஒரு லட்சம் தன்னார்வலர்களை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஈடுபடுத்த உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

T MANICKAM
ஜூலை 07, 2025 11:04

முதலில் இந்தமாதிரி கொண்டு வரும் ஆட்களை விரட்டுங்கள் இனி திமுக என்ற கட்சி இல்லை என்று முடுத்திவிடுங்கள்


Keshavan.J
ஜூலை 07, 2025 10:35

Even womens who has 4 wheelers eligible for 1000 rupees. what nonsense is this.


Oviya Vijay
ஜூலை 07, 2025 08:30

என்றைக்குமே லவ்பெல் பாஜகவை நோக்கிச் செல்வதை ராமதாஸ் ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டார். ஒருவேளை தேர்தலுக்கு முன்னே பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டால் பாமக அதிலே இடம்பெற வாய்ப்புள்ளது... அதுவும் திமுக கூட்டணியில் பாமகவுக்கு வாய்ப்பில்லை என்றால் மட்டுமே இதற்கு ராமதாஸ் ஒப்புக் கொள்வார். ஆனால் ராமதாஸ் மனம் எல்லாம் திமுக கூட்டணியில் இடம்பெற்று விடவேண்டுமென்று தான் துடித்துக் கொண்டிருக்கிறது... இதுநாள் வரையில் கையில் வைத்திருக்கும் ஐந்து எம்எல்ஏக்களையும் இழந்து விடுவோமோ என்ற பயம் தான் முக்கியக் காரணம்... திமுக கூட்டணியில் இணைந்தால் வெற்றி உறுதி என்று கண்முன்னே தெரிவதால் தான் இந்த ஏக்கம்...


Mani . V
ஜூலை 07, 2025 04:52

தேர்தல் வந்துவிட்டால் நம்ம சின்னராசுவை கையில் பிடிக்க முடியாது. நாடகம் நடத்துவதில் நம்ம சங்கரதாஸ் சாமியையும் தாண்டி விடுவார்.


Parthasarathy Badrinarayanan
ஜூலை 07, 2025 04:50

வரும் தேர்தலில் ஒட்டு விற்க வீடு வீடாக போகிறார்களாம். எனது வரிப் பணத்தை அள்ளி வீசி மக்களை பிச்சைக்காரர்களாக்குகிறது


Kasimani Baskaran
ஜூலை 07, 2025 03:43

மாநிலத்துக்கு வரும் வருமானத்தில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 25% இன்னும் சிலர் 16% என்றே உருட்டுகின்றனர் - அது ஆத்தா தீம்க்கா ஆட்சியில் வாங்கிய கடனின் அடிப்படையில் வரை வட்டிக்கே சென்று விடும். மீதம் 75% சதவிகிதத்தில் தீம்க்காவுக்கு போக மீதி பென்ஷன் வட்டி, ஊழியர் சம்பளம், மற்றும் உள்க்கட்டமைப்பு, நலத்திட்டங்களை பயன்படுத்த வேண்டும். இப்பொழுது கூடுதலாக நட்டத்தில் இயங்கும் மின்சாரவாரியம் மற்றும் போக்குவரத்துத்துறை மற்றும் கல்வி போன்றவற்றிற்கு செலவு செய்ய வேண்டும். இப்பொழுது கூடுதலாக மகளிர் உரிமை மற்றும் இலவச போக்குவரத்து கட்டணம் போன்ற சுமை


Oviya Vijay
ஜூலை 07, 2025 00:29

2026 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை மற்றும் இலவச பஸ் வசதி இவைகள் இரண்டும் மிக முதன்மையான காரணங்களாக இருக்கப் போகிறது... இவைகளுக்கு முன்னே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிபட்டுப் போய்விடும்...


sridhar
ஜூலை 07, 2025 06:58

கேவலமான விஷயத்தை கூட பெருமையாக பேச திமுக அல்லக்கைகளால் மட்டுமே முடியும்.


Oviya Vijay
ஜூலை 07, 2025 08:03

பாஜக மற்றும் அதிமுக ஏதோ உத்தமர்கள் என்பதைப் போல பேச வேண்டாம்...


Ragupathy
ஜூலை 07, 2025 08:10

மாதாமாதம் 20,000 கொடுத்தால் நல்லது...பணம் எங்கேன்னு கேட்கறீங்களா...உங்க ஆளுங்க கொள்ளையடிச்ச பணத்தை வச்சு 50 வருஷத்துக்கு கொடுக்கலாம்...