உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம் மக்கள் சரமாரி கேள்வி; தன்னார்வலர்கள் திணறல்

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம் மக்கள் சரமாரி கேள்வி; தன்னார்வலர்கள் திணறல்

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை உட்பட, 43 சேவைகளை பெறுவதற்கான, விண்ணப்பப் படிவம் வீடு, வீடாக வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. விண்ணப்பம் கொடுக்க செல்வோர், பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, பதில் அளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.தமிழக அரசு, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டம், 13 துறைகள் வாயிலாக வழங்கப்படும், 43 சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை, ஜாதி சான்றிதழ், வாக்காளர் அட்டை உள்ளிட்ட சேவைகளை, எளிதில் பெறும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

45 நாட்களுக்குள்

ஒவ்வொரு கிராமம் மற்றும் நகர்ப்புற வார்டுகளில், இரண்டு முறை முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னையில், 2,000 தன்னார்வலர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், வீடு, வீடாக விண்ணப்பம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் முதற் கட்டமாக, ஆறு வார்டுகளில் விண்ணப்பம் வழங்கும் பணி, நேற்று துவக்கப்பட்டது.விண்ணப்பம் வழங்கும்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்த தகவல்களை, மக்களுக்கு விளக்கி வருகின்றனர். அப்போது பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, தன்னார்வலர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, முகாம் நடக்கும் நாளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாம் நடந்த நாளில் இருந்து, 45 நாட்களுக்குள், மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

நடையாய் நடந்து

பொதுமக்கள் எழுப்பும் கேள்வி குறித்து, தன்னார்வலர்கள் சிலர் கூறியதாவது:

அரசின் பல்வேறு சேவைகள், எங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைப்பதில்லை. அதற்கு நடையாய் நடந்து, அலைந்து திரிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு லஞ்சம் கொடுத்தால்தான் பணி நடக்கிறது. பெரும்பாலான அரசு துறைகளில், மக்களின் சேவைகள் எளிதில் கிடைக்காதபோது, தற்போது முகாம் நடத்தினால் மட்டும் தீர்வு கிடைத்து விடுமா என கேட்கின்றனர்.முகாம் முடிந்த பின், மீண்டும் பழைய முறைப்படி தான் அரசு சேவைகளை பெற வேண்டுமா? தற்போது தேர்தலுக்காக அரசு சேவைகள் எளிதில் கிடைக்க வழிவகுக்கும் அரசு, நிரந்தரமாக எளிதான முறையில் பெற ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது. மகளிர் உரிமைத் தொகைக்கு, ஏற்கனவே பலமுறை விண்ணப்பித்துள்ளேன்; தகுதி இருந்தும் எனக்கு வழங்கவில்லை. எங்கள் அருகில் வசிப்போர், கடந்த 23 மாதங்களாக பணம் பெற்றுள்ளனர்.

மன உளைச்சல்

இனி எங்களைத் தேர்வு செய்தால், நாங்கள் இழந்த 23 மாத பணத்தையும் சேர்த்து தருவரா? அப்போது தகுதி இல்லை என்று சொல்லித்தானே, எங்களுக்கெல்லாம் கொடுக்காமல் விட்டீர்கள். தேர்தல் நேரம் என்பதால், இப்போது மட்டும் எங்களுக்கு எங்கிருந்து வருகிறது தகுதி? அப்படியென்றால், தகுதி இருந்தும் எங்களை இத்தனை மாதமும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது ஏன் என, சரமாரியாக கேள்வி கேட்கின்றனர். இதற்கு பதில் அளிக்க முடியவில்லை. இருந்தாலும், முகாமில் விண்ணப்பித்தால், கட்டாயம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என, சமாதானமாக பேசி, அங்கிருந்து நகர்ந்து விடுகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Narayanan
ஜூலை 08, 2025 16:16

தேர்த்தலுக்கு முன்னர் இதுபோலத்தான் ஒரு பெரிய பெட்டியை வைத்து நமது கோரிக்கைகளை அந்த பெட்டியில் போட்டால் 100 நாட்களுக்குள் தீர்ப்பதாக சொன்னார் ஸ்டாலின் மற்றும் அவரது கழகத்தினர். அந்த பெட்டியும் காணவில்லை.கோரிக்கைகளும் நிறைவேற்றவில்லை . என்ன தெஹிரியத்தில் நம் வீட்டு வாசல்படி வருகிறார்கள் . அதெல்லாம் போகட்டும் நமது ஹிந்து சமயத்தை கேவலமாக பேசும் இவர்களை நமது தெருவில் கூட ஏற்றக்கூடாது .


ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 14:45

என்னம்மா. இப்படிப் பண்றீங்ககளேம்மா. தலைமைப் பதவிக்கு ஸ்டாலின் தகுதியுடையவில்லை எனப் புரிந்ததால்தானே அப்பாவின் அப்பா அவருக்கு அப்ப பதவியைத் தராமல் தாமதித்திருந்தார்? தகுதியுள்ள என்பதற்கு அவர்களது அகராதியில் அர்த்தமே வேறு. நேரம் கிடைக்கும் போது கண்ணதாசன் எழுதிய வனவாசம் படியுங்கள்.


Sivak
ஜூலை 08, 2025 11:56

ஓட்டுக்கு துட்டு .... மக்கள் வரிப்பணத்தில் ... திமுகவின் நாதாரித்தனம்


S.V.Srinivasan
ஜூலை 08, 2025 11:54

என்னவோ இவங்க அப்பா வீட்டு பணத்தை எடுத்து கொடுக்கிற மாதிரி உங்களுடன் சுடாலின், கலைஞர் மகளிர் உரிமைன்னு குடும்ப பேரை வச்சுக்கிட்டு இப்பவே வரும் தேர்தலுக்கான லஞ்சம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பா. தேர்தல் ஆணையம் முழிச்சுக்குட்டு நடவடிக்கை எடுங்கப்பா.


chinnamanibalan
ஜூலை 08, 2025 11:31

வருவாய் துறையில் பட்டா பெற பல ஆயிரங்களில் லஞ்சம். ஆட்சி அதிகாரத்திற்கு வருவோர் நேர்மையற்றவர்களாக இருக்கும் போது, அவர்களுக்கு கீழே பணி புரிவோர் மட்டும் எப்படி நேர்மையாளராக இருப்பர்?


அப்பாவி
ஜூலை 08, 2025 11:25

மிரட்டி...


Anantharaman Srinivasan
ஜூலை 08, 2025 10:32

ஏமாற்றாதே ஏமாற்றாதே இவங்களுக்கு ஒட்டை போட்டு ஏமாறாதே.


RAMESH
ஜூலை 08, 2025 09:21

எங்கே போனாலும் லஞ்சம்.... பட்டா.... வாங்கவே முடியாது லஞ்சம் கொடுக்காமல்....அரசின் திட்டங்கள் மக்களை சென்றே சேர லஞ்சம்..... முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா


S.V.Srinivasan
ஜூலை 08, 2025 11:57

அதுல பங்கு இருக்கே. அப்புறம் எப்படி நடவடிக்கை எடுப்பாரு?


vbs manian
ஜூலை 08, 2025 08:41

மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் திட்டங்களுக்கு ஏன் முதல் அமைச்சர் பெயர் வைக்கப்படுகிறது. தனி மனித விளம்பரம் சரியில்லை.


rama adhavan
ஜூலை 08, 2025 07:25

பட் என்று பட்டா வரும் என்னும் போலி உறுதிமொழி போல் தான் இதுவும். தீரும் ஆனால் தீராது.


முக்கிய வீடியோ