உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிர் உரிமைத் தொகையா? தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

மகளிர் உரிமைத் தொகையா? தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று கூறிவிட்டு, 2023ம் ஆண்டு வரை கிடப்பில் போட்டது ஏன்? 30 மாதங்கள் வழங்காமல், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் சிலருக்கு மட்டும் உரிமைத் தொகையை வழங்கியது ஏன்? 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், சில மாதங்களில் மீதமுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி மீண்டும் மீண்டும் தமிழக மகளிரை ஏமாற்ற முயற்சிப்பது ஏன்? மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா? தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைத் தொகையைப் பெற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் கால்கடுக்க நின்று மனு அளித்தபோதெல்லாம் கண்டுகொள்ளாத திமுக அரசுக்குத் தேர்தல் நெருங்கும்போது மட்டும் மகளிரின் உரிமை ஞாபகம் வருகிறதா? ஆட்சி அரியணை ஏறும் முன் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, ஆட்சி அமைத்ததும் 'தகுதியற்றவர்கள்' என்று சிலரை முத்திரை குத்துவது தான் திராவிட மாடல் சமத்துவமா?இத்திட்டத்தின் பயனாளிகளை அநாகரீகமாக விமர்சித்து திமுகவினர் புளகாங்கிதம் அடையும் வேளையில், இது உண்மையிலேயே மகளிர் உரிமைத் தொகையா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் தொகையா? சரி, தங்கள் கணக்குப்படி, தகுதியுள்ளவர்கள் என்று வகைப் படுத்தப்பட்ட மகளிருக்கு 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்காமல் விட்ட உரிமைத் தொகையான ரூ.30,000 கடனை எப்போது தான் அடைப்பீர்கள்?போதும் போதும் முதல்வரே! ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று கடந்த நான்காண்டுகளில் பல்லாயிரம் முறை ஏமாற்றிய உங்களை இனி ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

pakalavan
அக் 11, 2025 19:16

அப்புறம் ஏன் பாஜக காரங்க எல்லா மாநிலத்திலும் மகளிருக்கு பணம் குடுக்குறீங்க ?


T.sthivinayagam
அக் 11, 2025 18:02

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் பாஜாக கொடுத்தது மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா நீங்களே சொல்லுங்கள் தலைவரே


ராமகிருஷ்ணன்
அக் 11, 2025 17:23

திருமங்கலம் பார்முலா தான் மகளீர் உரிமை தொகை ஆகிவிட்டது. ஓட்டுக்காக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மானம் கெட்ட திமுக


பிஹாரிபாபு
அக் 11, 2025 16:05

போய் பிஹார்ல கேளு.


ராமகிருஷ்ணன்
அக் 11, 2025 19:20

தமிழ் நாட்டை பார்த்து தான் பீகார் காரன் கெட்டான்.


KRISHNAN R
அக் 11, 2025 15:45

இது என்ன புது கேள்வி? ஜங்கிரிவால்.. தில்லியில்.. இலவச பஸ் கொடுத்ததே... மறைமுக. தேர்தல் முன். கையூட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை