உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டில் துாங்கி கொண்டிருந்த தொழிலாளி வெட்டிக்கொலை

வீட்டில் துாங்கி கொண்டிருந்த தொழிலாளி வெட்டிக்கொலை

உடுமலை;உடுமலை அருகே, வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த கட்டட தொழிலாளியை, மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொங்கல்நகரம் கிராமத்தைச்சேர்ந்தவர் சபரீசன், 35; கட்டட தொழிலாளி. மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில், தாய் ராணியுடன் வசித்து வந்துள்ளார்.வீட்டு வளாகத்திலுள்ள, தனியறையில் துாங்கும் வழக்கம் உடைய சபரீசன், நேற்று காலை நீண்ட நேரமாகியும் எழுந்து வரவில்லை. சந்தேகமடைந்த தாய், சென்று பார்த்த போது, சபரீசன் கழுத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.சம்பவ இடத்துக்கு வந்த குடிமங்கலம் போலீசார், அவரது உடலை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூரிலிருந்து மோப்பநாய் 'டெவில்', வரவழைக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள வீடுகளின் 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில், விசாரணையை துவக்கியுள்ள போலீசார், குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.வீட்டில் துாங்கி கொண்டிருந்த தொழிலாளி, கூர்மையான ஆயுதங்களால் கழுத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 30, 2025 20:28

தமிழகத்தில் ஆட்சி நடக்கவில்லை. அராஜகம்தான் தினம் தினம் நடக்கிறது. மக்களை காப்பாற்ற தெரியாத அரசு இருந்து என்ன பயன்?


Ramesh Sargam
ஜூன் 30, 2025 20:19

தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்திற்குள் நடந்த கொடுமைகள்: 1 மகன் வாங்கிய கடனுக்கு தந்தையை கடத்தி கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல். 2 திருபுவனத்தில் போலீஸ் விசாரணையில் வாலிபர் மரணம். 3 உடுமலையில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த தொழிலாளி வெட்டிக்கொலை. தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? அல்லது அராஜகம் நடக்கிறதா? முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மற்றும் போலீஸ் துறையில் உள்ள பெரிய பெரிய அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? மனித உரிமை குழுமத்துக்கு இதுபோன்ற அராஜகங்கள் தெரியவில்லையா? நீதிமன்றத்தில் உள்ள நீதிமான்களுக்கு இதுபோன்ற அராஜகங்கள் தெரியவில்லையா? என்ன நடக்கிறது தமிழகத்தில்?