உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கோவையில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கோவை: கோவை ஆர்எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச ஹாக்கி மைதானம் பணிகள் துவங்கப்பட உள்ளது. அதை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தை விளையாட்டு தலைநகராக்கும் வகையில் விளையாட்டு துறை அமைச்சர் செயல்பட்டு வருகின்றார். ஹாக்கி வீரர்கள் கோரிக்கை ஏற்று ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும். கோவையின் வளர்ச்சிக்காக ரூ.200 கோடி ரூபாயினை முதல்வர் அறிவித்துள்ளார்.போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறும் என கூறியவர், ஏற்கனவே முதல்வர் சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அறிவித்துள்ளார். விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்பட்ட உள்ளது. கடந்த ஆட்சியில் சாலைகள் போடாமல் விட்டதால் இப்போது சாலை பணிகளுக்காக கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. ரூ. 200 கோடி நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது மீண்டும், ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின் மாற்றி கொள்முதல் செய்யப்பட்டதில் மின்வாரியத்தில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அந்த நடைமுறைதான் இப்போதும் பின்பற்றப்படுகின்றது. அதில், எந்த விதமான தவறுகளும் நடைபெறவில்லை. இதில் வேறு யார் தலையீடும் இல்லை. ஆன்லைன் முறைப்படியே விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடந்துள்ளது. இதற்கான குழுவில் அனைத்து அதிகாரிகளும் உள்ளனர். இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 20, 2024 19:56

முதலில் தமிழகத்தை மக்கள் பயமின்றி வாழத்தகுந்த மாநிலமாக மாற்றவும். சென்னையில் ஒரு மருத்துவர் அவர் பணிசெய்யும் மருத்துவமனையிலேயே கத்தியால் குத்திப்பட்டார். இன்று ஒரு ஆசிரியை அவர் பணிசெய்யும் பள்ளியியிலேயே ஒரு கொடூரனால் குத்தி கொலைசெய்யப்பட்டார். ஓசூரில் ஒரு வழக்கறிஞர் பட்டப்பகலில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டார். இப்படி சட்டம் ஒழுங்கு இல்லாத மாநிலத்தில் மக்கள் தினம் தினம் நிம்மதியின்றி வாழ்கின்றனர். இதில் உலகத்தரம் வாய்ந்த மைதானமாம். மைதானம் வேண்டும். மறுக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பு மக்கள் நிமாதியாக வாழ மாநிலத்தை மாற்றுங்கள் அமைச்சரே.


புதிய வீடியோ