முதுநிலை ஆசிரியர் பணி செப்., 28ல் எழுத்து தேர்வு
சென்னை:தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணிஇடங்களை, நேரடி நியமனத்தின் வாயிலாக நிரப்பும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்பள்ளிகளில், 3,500க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் பாதியை, எழுத்து தேர்வு வாயிலாக நேரடி நியமனம் செய்தும், மீதியை பதவி உயர்வு வாயிலாகவும் பள்ளி கல்வித்துறை நிரப்புகிறது.அந்த வகையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம், 1,996 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு, அடுத்த மாதம் 12ம் தேதி மாலை 5:00 மணி வரை, https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, ஆக., 13 முதல் 16 வரை அவகாசம் வழங்கப்படும். செப்., 28ல் எழுத்து தேர்வு நடக்கும்.இது குறித்த கருத்துகள், தெளிவுகள் தேவைப்படுவோர், tngov என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.