உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலெர்ட்: 4 நாட்கள் வானிலை நிலவரம் விபரம் இதோ!

5 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலெர்ட்: 4 நாட்கள் வானிலை நிலவரம் விபரம் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (டிச.,14) கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (டிச.,14) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை (டிச.,15)

* ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (டிச.,15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த 6 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் 17ம் தேதி

* கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 4 மாவட்டங்களுக்கு டிசம்பர் 17ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் 18ம் தேதி!

* விழுப்புரம், கடலூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு டிசம்பர் 18ம் தேதி ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sundarsvpr
டிச 14, 2024 16:58

கன மழையால் பாதிப்பை செயல் அலுவலகத்தில் இருப்பதால் பார்க்கமுடியும். உணரமுடியாது. எனவே வரும் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தலைமை அமைச்சர் உட்பட எல்லா அமைச்சர்களும் ஒவ்வொரு மாவட்டத்தை தத்து எடுத்து பணி புரிந்தால் on the part நிலைமையை அறிந்து நடவடிக்கை எடுக்கலாம்.


நாகராஜ் ரா
டிச 14, 2024 14:43

தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.


சமீபத்திய செய்தி