உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சித்தலைமை நடவடிக்கைக்கு முன் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை!

கட்சித்தலைமை நடவடிக்கைக்கு முன் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை!

சென்னை: தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து கழகம் ஒன்று பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த அறிக்கை வெளியான நிலையில், அவரது கட்சிப்பதவிகளை பறித்து இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று செங்கோட்டையன் நிருபர்கள் சந்திப்பில், ''அ.தி.மு.க.,வில் இருந்து வெளியே சென்றவர்களை இணைக்க, பொதுச்செயலர் பழனிசாமி 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், என் போன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் சேர்ந்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன்,” என தெரிவித்தார்.இந்நிலையில் இன்று (செப் 06) செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை: எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவால் வெற்றிகரமாக வழிநடத்தப்பட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். இன்னும் நூறாண்டுகள் தமிழக மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற வகையில் பெரும்பான்மையான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து கழகம் ஒன்று பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறேன். இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியை அறிந்து பல்லாயிரக் கணக்கானோர் வருகை தந்து, எனக்கு பெரும் வரவேற்பை அளித்த அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். நன்றி. இவ்வாறு செங்கோட்டையன் கூறியிருந்தார்.

செங்கோட்டையன் நீக்கம்

இந்நிலையில், கட்சியினருடன் ஆலோசனைக்கு பிறகு, அதிமுகவின் அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கம் செய்து இபிஎஸ் உத்தரவிட்டார்.

ஆதரவாளர்கள் பதவியும் பறிப்பு

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பதவிகளை பறித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Mecca Shivan
செப் 06, 2025 20:35

சரக்கு லாரிகளில் வேகக்கட்டுப்பாடு இயந்திரம் பொருத்துவதில் பல கோடிகள் சம்பாதித்த நபர்


sankaranarayanan
செப் 06, 2025 17:23

பொதுச்செயலர் பழனிசாமி 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், என் போன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் சேர்ந்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன்,” என தெரிவித்தார்.இது என்ன ஒரு கட்சி பிரமுகர் பேச்சா இது யார் யாரோ மிரட்டுவது கண்ணியமாக பேசி மக்களிடம் குறைகளைக்கூறி எல்லோரையும் அரவணைத்து சென்றால் வெற்றி கிட்டும் இதுபோன்று 10-நாட்கள் என்று நேரம் ஒதுக்குவது கட்சி பிரமுகருக்கு அழகல்ல வீழ்ச்சிக்குத்தான் வழி


Palanisamy Sekar
செப் 06, 2025 13:30

சட்டவிரோதமான நடவடிக்கை இது. கட்சியில் ஜனநாயகம் என்று ஒன்று உண்டே தெரியுமா இந்த பழனிச்சாமிக்கு? என்னமோ மனதில் சர்வாதிகாரி என்கிற நினைப்பில் சகட்டுமேனிக்கு ஒவ்வொருவரையும் மிரட்டி பணியவைக்க பார்க்கின்றார் பழனிச்சாமி. களப்பணியாளர் இந்த செங்கோட்டையன். அவரை பகைத்துக்கொண்டு கொங்கு மாவட்டத்தில் எதனை யாரை வைத்து சாதிக்க போகிறார் இந்த பழனிச்சாமி. இவரை நம்ம்ம்பி பாஜக கூட்டணி வைத்துள்ளது கொடுமைதான். இவருக்காக அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறு தலைவரை நியமித்ததும் கொடுமைதான். அதிமுக என்கிற ஆலமரத்தை வீழ்த்தாமல் ஓயமாட்டார் போலும் இந்த பழனிச்சாமி. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பது புரியாமல் துரோகத்தால் வீழ்த்துகின்றார் பழனிச்சாமி. கரையான் புற்றெடுக்க என்கிற பழமொழிக்கு ஏற்ப நடக்கும் பழனிச்சாமியை நீக்க சட்ட வல்லுநர்களை ஆலோசித்து உடனே செயலில் இறங்கவேண்டும்.


Santhakumar Srinivasalu
செப் 06, 2025 13:12

ஆக ஈரோட்டையும் கை கழுவிட்டார். தென்மாவட்ட அளவிலான ஆதரவும் இல்லாமல் பிஜெபி க்கு முழ சரண்டர் ஆகவேண்டும்!


தத்வமசி
செப் 06, 2025 12:59

எடப்பாடிக்கு என்ன மன வலிமை என்றால் திமுக ஆட்சிக்கு வரட்டும், இல்லை நமக்கு ஓட்டு விழுந்தால் நாம் முதல்வர் ஆகி விடுவோம். திமுக இல்லையென்றால் அதிமுக என்கிற பழைய பார்முலாவில் இருக்கிறார். அதன் பிறகு அதிமுக என்பது மொத்தமாக எடப்பாடி தான் என்றாகி விடும் என்று நினைக்கிறார். ஆனால் நிலைமை என்னவென்றால் அதிமுகவிற்கு ஓட்டு போட இளைஞ்சர்கள் விரும்பவில்லை, காரணம் இவர்கள் ஒன்றாக இல்லை. அதிமுகவின் நெடுநாளைய விரும்பிகளும் இதை ரசிக்கவில்லை. அதனால் இதில் இருந்து பிஜேபிக்கு இவர்களின் ஓட்டு செல்லும். இதை நாம் கடந்த தேர்தலிலேயே கண்டோம். நடிகர் விஜயின் நுழைவு அதிமுகவில் இருந்து இளைஞ்சர்களின் ஓட்டுக்களை பிரிக்கும். திமுக ஆட்சியின் மீது அதிகமான வெறுப்பு இருந்தாலும், அடுத்து வலிமையான தலைவர் யார் ? என்கிற கேள்வியில் எடப்பாடி முதல் மூன்றில் இல்லை. அதனால் எடப்பாடிக்கு ஓட்டு கூட வாய்ப்பில்லை. அதிமுகவுக்கு ஓட்டு சதவிகிதம் கூடாது. ஆக கடந்த தேர்தல் போல நாற்பது - அம்பது சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பார் எடப்பாடி. அதனால் லாபம் அடையப் போவது ஒன்று திமுக, மற்றொன்று விஜய். எடப்பாடியுடன் பிஜேபி இல்லையென்றால் அதிமுக விஜயுடன் சேர வாய்ப்புள்ளது. அப்படி சேர்ந்தால் காங்கிரஸ், திருமா, கம்யுனிஸ்டுகள் என்று ஒரு கலவையை உருவாக்கி முதல்வராகலாம் என்று எடப்பாடி நினைத்தால் நடக்காது. அந்த கூட்டணியில் விஜய் தான் முதல்வராக வருவார். எடப்பாடிக்கு காலமில்லை. அதிமுக மொத்தத்தில் தேய்ந்து வருகிது.


Svs Yaadum oore
செப் 06, 2025 13:24

எடப்பாடிக்கு அ தி மு க ஜெயிக்கனும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது ....அவர் தொகுதியில் ஜெயிக்கனும் அதே நேரம் அ தி மு க வும் அவர் பிடியில் இருக்கனும்....இந்த ரெண்டு திராவிட கட்சிகளில் யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் சம்பாதிப்பதில் எந்த பாதிப்பும் இல்லை ...அதுக்கு நாற்பது - அம்பது சட்டமன்ற உறுப்பினர் அ தி மு க வுக்கு போதும் .....நடிகன் கட்சியை இந்து ரெண்டு திராவிட கட்சிகளும் வளர விட மாட்டார்கள் ...நடிகனும் அதற்கு தயாரில்லை ....விடியல் அடுத்த தேர்தலில் ஜெயிக்க விடியல் உருவாக்கிய பினாமி கட்சிதான் நடிகன் கட்சி ....


RRR
செப் 06, 2025 12:43

2026 தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி மூன்றாம் இடத்துக்குக்கூட தேறாத நிலையில் உள்ளது... திருட்டு உருட்டு திராவிஷ கோடுகோலாட்சி தீயமுகவுக்கும் தற்குறி வெட்டிக்கழகத்துக்கும் சாதகமாகத்தான் களம் உள்ளது...


ponssasi
செப் 06, 2025 12:28

திமுக அதிமுக என இரு ஊழல் தலைவர்களையும் பாரபட்சமில்லாமல் தாக்குவது தமிழகத்தில் இருவர் மட்டுமே 1. அண்ணாமலை 2. சீமான் இருவரின் பேச்சுகளும் மக்களிடம் எளிதில் சென்றடைகிறது. இருவருக்கும் மக்கள் பெரும் ஆதரவு தருகிறார்கள் அது வாக்காக மாறுமா? ஆனால் ஒருநாள் கண்டிப்பாக மாறும் வாக்குக்கு பணம் பெறுவது நின்றுவிட்டால் அல்லது பணம் பெறுவது அவமானம் என வாக்காளர் தலைமுறை நினைத்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும். இதில் அண்ணாமலை கொஞ்சம் கூடுதல் செல்வாக்கோடு வலம்வருகிறார். அவரின் நேர்மை, துணிச்சல், தொண்டர்களிடம் காட்டும் பணிவு, அவரிடம் உள்ள புள்ளிவிவரங்கள். சீமானிடம் துணிச்சல் மட்டுமே உள்ளது மற்றவை மிஸ்ஸிங்


Raja
செப் 06, 2025 12:24

சபாஷ் சரியான முடிவு எடப்பாடி அவர்களே...கடந்த சில மாதங்களாக "அதிமுக ஒன்றாக இணைய வேண்டும், பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க வேண்டும், அப்போதுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும்" என்றல்லாம் சிலர் கூறி வருகின்றனர். முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. அதிமுக பிளவுபடவில்லை. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவ்வளவுதான். இவர்களை நீக்கியதால்தான் தோல்வியடைகிறது என்ற கூற்று பொய்யானது. பன்னீர்செல்வம் உடனிருந்த போதுதான் சென்ற சட்டசபை தேர்தலில் அதிமுக தோற்றது. பன்னீர்செல்வம் இல்லாததால் முக்குலத்தோர் ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்காது என்று சொல்வது ஒரு மாயை. அப்படியென்றால் 2021 சட்டசபை தேர்தலில் தென்தமிழகத்தில் அதிமுக ஓட்டு குறைந்தது ஏன்? பன்னீர்செல்வமே அவரது சொந்த தொகுதியில் மிகவும் சிரமப்பட்டுதான் வென்றார். அந்த தேர்தலில் உள்ளடி வேலை செய்து தென்தமிழகத்தில் அதிமுக தோற்க காரணமாக இருந்ததே இந்த பன்னீர்செல்வம்தான். தனது சமுதாய மக்களிடமும், சொந்த தொகுதியிலும் செல்வாக்கை இழந்த ஒரு அரசியல்வாதி பன்னீர்செல்வம். இவர் வந்து மாபெரும் இயக்கமான அதிமுகவை வெற்றிபெற வைப்பார் என்பது நகைப்புக்குரியது. செங்கோட்டையன் திமுகவுக்கு சென்றாலும் வியப்பில்லை.


திகழ்ஓவியன்
செப் 06, 2025 12:21

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை இன்னும் 10 நாட்களில் ஒன்று சேர்க்க முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் அவர் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


ஆரூர் ரங்
செப் 06, 2025 12:18

ஒரே கவுண்ட ரில் இரண்டு பேருக்கு இடமில்லை. ஒரே உறையில் இரண்டு கத்திகள் போல.


புதிய வீடியோ