உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யோகா, உலகிற்கு பாரதம் அளித்த கொடை; 51 தண்டால் எடுத்து அசத்திய கவர்னர் ரவி!

யோகா, உலகிற்கு பாரதம் அளித்த கொடை; 51 தண்டால் எடுத்து அசத்திய கவர்னர் ரவி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரையில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட கவர்னர் ரவி, 51 தண்டால் எடுத்து பார்வையாளர்களை அசத்தினார். கவர்னருக்கு வயது 73. சர்வதேச யோகா தினம் முன்னிட்டு, மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி யோகா கற்றுக் கொடுத்தார். அப்போது கவர்னர் ரவி பேசியதாவது: யோகா, உலகிற்கு பாரதம் அளித்த கொடை. உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தை வழங்கும் சக்திவாய்ந்த ஆதாரம். இளையோர்கள், தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக யோகாவை கருத வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=119rcbfx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முருகக் கடவுள் தான்!

இதற்கிடையே, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் அருட்காட்சியை கவர்னர் ரவி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், கவர்னர் ரவி கூறியதாவது: ஒரே இடத்தில் அறுபடை முருகனை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆறு அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை முன்னெடுத்துள்ள இந்து முன்னணிக்கு எனது வாழ்த்துக்கள். முருகன் நம் கலாசாரத்திற்கான கடவுள். இது நமது கலாசார அடையாளம். இது தான் நமது பாரதம். முருகனின் அறுபடை வீடுகளையும், ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டும் என்பது நமது கனவு. ஒருநாள் இது பலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

யோகா செய்த அண்ணாமலை!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அவரது இல்லத்தில், யோகா பயிற்சி மேற்கொண்டார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: யோகா பயிற்சிகள், உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நல்வாழ்வை மேம்படுத்துவதை , உலக நாடுகள் உணர்ந்து வருகின்றன. உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில், மக்கள் பலரும் யோகாவை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். யோகா பயிற்சி செய்வது வழக்கமான உடற்பயிற்சியைத் தாண்டி, உடல் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்துவதோடு, சுவாசத்தை சீரமைப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது என, அன்றாட வாழ்வை மேம்படுத்துகிறது. அனைவரும் யோகாசனம் செய்வோம். நமது உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்துவோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

அப்பாவி
ஜூன் 21, 2025 18:25

யோகா மட்டுமா? கார், பஸ், ரயில், விமானம், கம்பியூட்டர், மருந்துகள் எல்லாமே இந்தியாவோட கொடைதான். எல்லாவற்றையும் திருடிக்கிட்டு போயிட்டாங்க


Suppan
ஜூன் 21, 2025 21:29

இது என்ன மாதிரியான பிதற்றல்?


C S Hariharan
ஜூன் 21, 2025 17:59

The Governor has done a very good job at this age. God bless him


Kumar Kumzi
ஜூன் 21, 2025 17:50

வாப்பா லண்டனில் நடத்திய சர்க்கஸ் வித்தையை யாராலும் அடிச்சிக்க முடியாது


Oviya Vijay
ஜூன் 21, 2025 16:05

ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு ஹிந்துக்களில் கறைபடிந்த Nagendran போன்ற சங்கிகள் என்றழைக்கப்படும் ஒரு சிறு பகுதியினரை தொடர்ந்து எதிர்ப்பதில் எந்நாளும் பெருமை கொள்கிறேன். பெரும்பாலான ஹிந்துக்கள் அதிலும் தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்கள் அடுத்த மதத்தினவரை சக மனிதர்களாகப் போற்றும் மாண்பு கொண்டவர்கள். பிஜேபியில் இருக்கும் ஒரு சில கழிசடைகள் மட்டுமே எப்போதும் மாற்று மதத்தவரை சீண்டிக் கொண்டே இருப்பர். எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு மதத்தை இங்கே தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களை அண்ட விடாமல் செய்தாலே போதும். தமிழகம் அமைதியாக நடைபோடும்...


Sakthi,sivagangai
ஜூன் 21, 2025 16:59

ஆமா அப்பமா இல்ல Ricebag இதில் எது முதன்மை நீயா இந்துன்னு சொல்லிக்கிட்டா போதுமா நீ போடும் கருத்து க்கள் பூரா இந்து வெறுப்பு கருத்துதான் இதுல நீலிக்கண்ணீர் வேற ஏலே அங்கிட்டு ஓரமா போய் ஒப்பாரி வை....


ராஜ்
ஜூன் 21, 2025 17:26

பேசுறது எல்லாம் இந்து எதிர்ப்பு இங்க வந்து கதை விட வேண்டியது


K V Ramadoss
ஜூன் 21, 2025 21:12

ஆமா யோகா பத்திய செய்தியில இது என்ன சம்பந்தமில்லாம ? இடம் கிடைசசா போதும், ஏதாவது உளறி விட வேண்டியதா ?


vivek
ஜூன் 22, 2025 03:38

காலி அண்டா இந்த ஓவிய விஜய் ஹி ஹி


Balasubramanian
ஜூன் 21, 2025 14:42

ஆளும் கட்சியினர் யாரும் கலந்து கொள்ளவில்லையா?! அவர்களுக்கு யோகம் இல்லை, இப்பவும் வரும் தேர்தலிலும்


K Ganesan
ஜூன் 21, 2025 14:32

India gave yoga to the world. Caste tem was also given to the world. Yoga practiced by some people. But e tem is being practiced by all. Its discriminations are also practiced by all.


Minimole P C
ஜூன் 21, 2025 21:33

First part is correct, and second part is incorrect.


Oviya Vijay
ஜூன் 21, 2025 14:25

ஒருவேளை உச்ச மன்றத்துகிட்ட இருந்து குட்டு வாங்குனதுக்கு அப்புறம் இவ்ளோ சுறுசுறுப்பு வந்திருக்கோ என்னமோ... ஏன்னா அதுக்கு முன்னாடி எல்லாம் ஒவ்வொரு ஃபைலையும் ரெண்டு மூனு வருஷம் எல்லாம் கெடப்பில போட்டு வெச்சிருந்தவராச்சே... இவ்ளோ சுறுசுறுப்பா அப்போ இருந்ததில்லையே... அதான் டவுட்டு வருது...


ஆரூர் ரங்
ஜூன் 21, 2025 15:02

ஆமாம் செந்தில் பாலாஜிக்குக்கூட பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர்தான்.


Nagendran,Erode
ஜூன் 21, 2025 15:03

அப்பத்துக்கு மதம் மாறிய கும்பல்களுக்கு கவர்னர் ரவியை பார்த்து வயிறு எரிகிறது


angbu ganesh
ஜூன் 21, 2025 13:59

இதென்ன பிரமாதம் எங்க முதல்வர் உடற்பயிற்சி செஞ்சி நீங்க பாக்கலியா


ஆரூர் ரங்
ஜூன் 21, 2025 15:02

அது வேற லெவல்.


sundarsvpr
ஜூன் 21, 2025 13:48

அதிகாலையில் விழித்து சூரிய உதயத்திற்கு முன் குளித்தல் செய்தபிறகு தேக பயிற்சி விளையாட்டு போன்றவைகளில் கவனம் செலுத்தல் அவசியம் என்பதனை ஏன் வலியுறுத்துவதில்லை? இதுபோல் இரவு 9 முதல் 10 மணிக்குள் உறங்கச்செல்வதை ஏன் வலியுறுத்துவதில்லை.? இதனை ஊடகங்கள் வலியுறுத்தவேண்டும். ஆளுநர் தண்டால் எடுத்தது முக்கிய செய்தியல்ல. காலை அல்லது மாலையில் ஆளுநர் நடைப்பயிற்சி எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தால் அது எல்லோருக்கும் உந்துதலாக இருக்கும்


Lion Drsekar
ஜூன் 21, 2025 13:44

வேலைக்கு சேரும்போது மட்டும் உடதகுதி தேவை ... சேர்ந்த பின்பு எப்படி என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம் , அப்படி இருக்க ஆளுநரின் உடதகுதி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி, வந்தே மாதரம்