உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் முருக பக்தர் மாநாடு: யோகி, பவன் கல்யாண் பங்கேற்பு

மதுரையில் முருக பக்தர் மாநாடு: யோகி, பவன் கல்யாண் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர், : மதுரையில், 'குன்றம் காக்க... கோவிலை காக்க' என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு, மதுரையில், ஜூன் 22ல் ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ளது.ஒன்றரை மாதமாக, தமிழகம் முழுதும் மக்களை சந்தித்து, மாநாட்டில் பங்கேற்க ஹிந்து முன்னணியினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோரை பங்கேற்கச் செய்ய முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:

அரசியல் அல்லாத ஆன்மிக மாநாடாக இது நடைபெறும். மாநாட்டு பணி மும்முரமாக நடக்கிறது. இதுவரை, 750 வேல் வழிபாடுகள் நடத்தி மாநாடு குறித்து தெரியப்படுத்தி உள்ளோம்.மாநாட்டில், அறுபடை வீடு தொடர்பான கண்காட்சி இடம்பெற உள்ளது. முன்னாள் முதல்வர் பழனிசாமி, த.மா.கா., தலைவர் வாசன், நடிகர் ரஜினி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மடாதிபதிகள் மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்., உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

sankar
மே 27, 2025 23:53

அண்ணாமலை இல்லாமல் முருகன் அருள் பலிக்கமாட்டார் . முதலி அவரை கூப்பிடுங்கள்


தஞ்சை மன்னர்
மே 27, 2025 11:16

இருக்குற அரசியல் வியாதிகள் அனைவரையும் அழைத்து வருவார்களாம் சர்ச்சை கூறிய அரசியல் கருத்து வெளியிடும் நபர்களுக்கு அழைப்பு விடுவார்களாம் அப்புறம் வந்து இது முழுக்க முழுக்க ஆன்மிக மாநாடு என்று புளுகுவர்களாம் நாமும் நம்ம வேண்டுமா அப்புறம் இவர்களில் சிலர் கலவரம் தூண்டுவதுபோல பேசிவிட்டு இவர்களே ஆளும் செட் செய்து விட்டு கல்லை வீசினர் காத்தை வீசினர் ஆகாச புளுகு பேசவேண்டியது திறமையாக மதத்தை வளர்க்க தெரியாத கோமாளி மத மதத்தை பார்த்து பொறாமை பட்டானாம் என்பது போல சித்தர்களும் யோகிகளும் தன்னை வளர்த்து கொண்டு பிற மக்களை யும் பக்தி மயமாக்கினார் ஆனால் இங்கே சிலர் தன சட்டி பானை வயிறை வளர்க்க மதம் என்ற பெயரில் என்னத்த சொல்ல


ameen
மே 27, 2025 00:50

தமிழ் நாட்டை நாசம் செய்ய முடிவு பண்னிட்டாங்க போலிருக்குது


venugopal s
மே 26, 2025 18:10

ஒரே படத்தில் எல்லா நகைச்சுவை நடிகர்களும் சேர்ந்து நடித்தது போல் இருக்குமே!


மூர்க்கன்
மே 28, 2025 17:04

வெடி சிரிப்பு கன்பார்ம் ...ஆதினம் இல்லாமலா??


Kulandai kannan
மே 26, 2025 12:13

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 'மாவீரன்' ரஜினிகாந்த் வர மாட்டார்.


Natchimuthu Chithiraisamy
மே 26, 2025 10:52

கார்த்தி என்கிற பெயரில் கொண்டாடினால் முருகன் தானே


Barakat Ali
மே 26, 2025 10:17

ஒரு இந்தியக்குடிமகன் நாட்டின் எந்தப்பகுதிக்கும் செல்லும் உரிமை உள்ளது.. அது அரசியல் சட்டம் கொடுத்துள்ள உரிமை....


பாமரன்
மே 26, 2025 09:47

என்னமோ போங்க.. மருதக்காரய்ங்க கோவக்காரங்க... ரொம்ப கலாட்டா பண்ண ட்ரை பண்ணுனா டின்னு கட்டிடுவாங்க...


Barakat Ali
மே 26, 2025 10:18

யாருங்க? ஹார்லிக்ஸ் திருடனை எம் பி ஆக்குன மருதக்காரய்ங்களா ????


sankar
மே 27, 2025 23:58

மருதைக்காரன் வீரமானவன் மனமுள்ளவர்கள் மருதைக்கிறான் கோவை பட்டா இப்புடியே உருட்டி ஓட்டுவாங்க . என்ன பொருத்தவர எல்லா தமிழரும் காசுக்கு ஒட்டு போடும் மட்டைங்கதான் . சினிமா பயித்தியம் கிரிக்கெட் பதியமும் உள்ளவாகத்தான் தமிழ் மக்கள் . எவன் ஒருத்தன் பரம்பரை அந்த காரைங்க இந்த காரைங்க என்று சொல்லமா ஊழைக்கிறவன் மேல வருவான் . மத்த படி எல்லா காரைங்களும் மட்டைங்கதான்


நாஞ்சில் நாடோடி
மே 26, 2025 09:40

வெற்றிவேல் வீர வேல்


S.L.Narasimman
மே 26, 2025 08:01

தமிழ்கடவுள் முருகன் என்றாலும் உருவ வழிபாட்டை மதிக்கும் அனைத்து இந்தியர்களும் ஏன் உலகத்தோரும் வணங்கும் தெய்வமான முருகன் வழிபாட்டு மாநாட்டுக்கு யோகியோ, பவன்னோ மோடியோ, எடப்பாடியாரோ கலந்து கொள்வதில் தவறில்லை. உருவ வழிபாட்டை விரும்பாதோர் விலகியிருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை