உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் போலீஸ் மீதும் புகார் அளிக்கலாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் போலீஸ் மீதும் புகார் அளிக்கலாம்

சென்னை:'போலீசார் மீது தரப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி, காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மண்டல ஐ.ஜி.,க்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்பட்டு, பொது மக்களிடம் அரசு அதிகாரிகள் மனுக்கள் பெற்று வருகின்றனர். இந்த முகாம்களில், காவல் துறை சார்ந்த புகார்களை பெறவும் வசதி செய்யப்பட்டுஉள்ளது. மரியாதை குறைவாக பேசுதல், நாகரிகமற்ற முறையில் நடத்தல் தொடர்பாக, போலீசார் மீது பொது மக்கள் இம்முகாமில் புகார் அளிக்கலாம் என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலக வட்டாரம் கூறியதாவது:போலீசார் அச்சுறுத்தினாலோ, சட்டத்தை மீறி நடவடிக்கை எடுத்தாலோ, அவர்கள் மீது புகார் அளிக்கலாம். காவல் நிலையங்களில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுப்பது, சாட்சி சொல்ல வந்தவர்களை அலைக்கழிப்பது போன்ற செயலில் ஈடுபடும் போலீசார் மீதும், இம்முகாமில் புகார் அளிக்கலாம்.அதன் அடிப்படையில், தவறு செய்த போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். போலீசார் மீதான புகார்கள் குறித்து, காலதாமதமின்றி மண்டல ஐ.ஜி.,க்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அது குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு தினமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை