உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

 ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு, வரும் மே 17ல் நடக்கிறது. அதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., -- என்.ஐ.டி.,க்களில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு எனும், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இத்தேர்வு, முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என, இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.எஸ்., ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற தகுதி பெறுவர். அன்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், ஐ.ஐ.டி.,க்களில் சேர தகுதி பெறுவர். அந்த வகையில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அன்வான்ஸ்டு தேர்வு, வரும் மே 17ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வை, ஐ.ஐ.டி., ரூர்கி நடத்துகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. மாணவர் - மாணவியர், https://jeeadv.nic.inஎன்ற இணையதளத்தில், வரும் மே 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை