உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.ஐ.டி.,யில் பி.டெக்., படிப்பு நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

வி.ஐ.டி.,யில் பி.டெக்., படிப்பு நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: வி.ஐ.டி., பல்கலையில், 2026ம் கல்வியாண்டு பி.டெக்., படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. வி.ஐ.டி., பல்கலையின் வேலுார், சென்னை, அமராவதி மற்றும் போபால் வளாகங்களில், பி.டெக்., இன்ஜினியரிங் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இதற்கான, 2026ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு, ஒரே கட்டமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் 28 முதல், மே 3ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது துவங்கி உள்ளது. நாடு முழுதும், 134 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் ஒன்பது தேர்வு மையங்களிலும், நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது. இதற்காக மாணவர்கள், www.viteee.vit.ac.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள், தாங்கள் படித்த இடம் அல்லது சொந்த ஊரை அடிப்படையாக கொண்டு, தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்க கூடிய வசதி செய்து தரப்பட்டு உள்ளதாக, வி.ஐ.டி., பல்கலை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை