உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக உறுப்பினர்களை சேர்த்தால் தான் பா.ஜ.,வில் பதவி கிடைக்கும்: சந்தோஷ்

அதிக உறுப்பினர்களை சேர்த்தால் தான் பா.ஜ.,வில் பதவி கிடைக்கும்: சந்தோஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு தான் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும்' என, தமிழக நிர்வாகிகளிடம், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார்.தமிழக பா.ஜ., மாநில மைய குழு கூட்டம், சென்னை தி.நகர் கமலாலயத்தில் நேற்று நடந்தது.இதில், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் கவர்னர் தமிழிசை, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.'தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பணியில் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளதை, பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். கூட்டணி விவகாரம் தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று கூட்டத்தில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லப்பட்டது.இது தொடர்பாக, கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ வெளியிட்டு வலியுறுத்தியது தொடர்பாகவும் ஞாபகப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க.,வை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.பின், டில்லியில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் பேசியுள்ளதாவது:தமிழகத்தில், 68,000 ஓட்டுச்சாவடிகள் உள்ளன; ஒவ்வொன்றுக்கும் கட்சியின் கிளை அமைப்பை உருவாக்க வேண்டும். உறுப்பினர்கள் சேர்க்கை பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அனைத்து கிளைக்கும் வரும், 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி,நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.பா.ஜ.,வில் இருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் 50 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அந்தளவுக்கு சேர்க்காதவர்களுக்கு, எந்த பொறுப்பும் வழங்கப்படாது; அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நபர்களுக்கு தான் பொறுப்புகள்வழங்கப்படும்.எனக்குக் கிடைத்திருக்கும் தகவல் படி, தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு உறுப்பினர் சேர்க்கை இல்லை என்பது. அதனால், இருக்கும் மிச்ச சொச்ச நாட்களிலாவது, தீவிரமாக களமிறங்கி பணியாற்றி, பா.ஜ.,வில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.அடுத்த முறை நான் தமிழகம் வரும்போது, யாரும் எதிர்பாராத அளவுக்கு உறுப்பினர் சேர்க்கையை நடத்தி இருக்கிறோம் என்று, பா.ஜ., தமிழக தலைவர்கள் பெருமையுடன் என்னிடம் கூற வேண்டும். அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

துணிச்சலாக நடக்கும் கொலைகள்

பின், தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி:கட்சியில் கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் முடிவடைந்ததும், மாவட்ட அமைப்புக்கு தேர்தல் நடத்தி நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். ஜனவரியில் மாநில அமைப்புக்கு தேர்தல் நடக்கும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியது வரவேற்கத்தக்கது.பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் மகன், தமிழ் படிக்கவில்லை; பிரெஞ்ச் படிக்கிறார். இப்படியெல்லாம் இருக்கும்போதும், அவர்கள் தமிழை வைத்து இரட்டை வேடம் போடுகின்றனர். தமிழ் பற்றி பேச தி.மு.க.,வுக்கு எந்த அருகதையும் இல்லை.தி.மு.க.,வில் முக்கிய தலைவர்களின் குழந்தைகள் ஹிந்தி படிக்கலாம். ஆனால், ஏழை குழந்தைகள் படிக்க கூடாது. எத்தனை காலத்துக்குத்தான் இதே மோசடிகளை தொடருவரோ.தி.மு.க., வேடம் இனி எடுபடாது. பள்ளி குழந்தைகளின் பைகளில் ஆயுதங்கள் உள்ளன. தமிழகத்தில் தினமும் படுகொலைகள் துணிச்சலாக நடத்தப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Oviya Vijay
நவ 21, 2024 15:12

அதையே தான் நான் உங்களிடம் திருப்பிக் கேட்கிறேன் ஹரி. திமுக என்றால் நீங்கள் ஓடி வருவீர்கள். பிஜேபி என்றால் ஓடி ஒளிந்து கொள்வீர்கள். அப்படித் தானே. அதனால் தான் சொல்கிறேன். மற்றவர் கருத்துக்கள் மீது உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதை விடுத்து உங்கள் சொந்தக் கருத்தை பதிவிடுங்கள். உங்கள் மண்டையில் ஒரு சரக்கும் இல்லை என்பதை குறுக்கே மறுக்கே ஓடி வந்து வெளிப்படுத்தாதீர்கள். அனைவருக்கும் அவரவர் கருத்துக்களை சொல்ல இங்கே உரிமை உண்டு. நீங்கள் எதிர்பார்ப்பதைத் தான் மற்றவர்களும் தங்கள் கருத்தாக தெரிவிக்க வேண்டுமென எந்த அவசியமும் இல்லை.


hari
நவ 21, 2024 17:11

அடை, வடை என்று கருத்து போடும் போதே உங்கள் தராதரம் தெரிகிறது... டிசைன் அப்படி..சொல்லி குற்றமில்லை ஒவியறே


பாமரன்
நவ 21, 2024 12:06

ஆஹா... நாம் ஏற்கனவே மிஸ்ட் கால் மூலம் ஒரு கோடி பேரை தமிழ் நாடு ப்ராஞ்ச்ல சேர்த்துட்டதா சொல்லி மெடல் குத்திப்போம்ல... இப்போ ஒவ்வொருவரும் ஐம்பது பேரை இட்டாரனும்னா பர்மா சிலோன் மலாயா சிங்கை....அட அமீரக்காவுல கடையை விரிச்சா கூட பத்தாதே.... ம்ம்ம... பார்ப்போம் நம்ம அப்ரசண்டிக எதாவது காமெடி ஐடியா வச்சிருப்பாக... இந்த நகைச்சுவை டெலிவரிங் ஆக்ட் தான் எனக்கு பகோடா கம்பெனி வசம் பிடிச்சது...


Oviya Vijay
நவ 21, 2024 12:00

உண்மையைச் சொன்னால் உங்களுக்கெல்லாம் கசக்கத் தானே செய்யும் ஹரி... என்றைக்குமே நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களைப் பதிவிடுவதில்லை. அவ்வாறு உங்கள் சொந்த கருத்துக்களை பதிவிடும் அளவிற்கு உங்களிடம் சரக்கு இல்லை என்பது மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. மாறாக மற்றவர்கள் கருத்தின் மேலே வந்து உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறீர்கள். உங்களைப் போன்றவர்களுக்கு இது என்ன விதமான டிசைனோ...


hari
நவ 21, 2024 13:53

உங்கள் முட்டு அவளவு சிறப்பாக இல்லை...காரணம் பிஜேபி என்றால் ஓடி வருவீகள்...திமுக என்றால் உங்களை தேடவேண்டும்


Barakat Ali
நவ 21, 2024 09:43

மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் பிராடு மாதிரியே இருக்கு தல .........


pmsamy
நவ 21, 2024 09:23

பாஜக மொள்ளமாறிங்க ஹா ஹா ஹா


saravanan
நவ 21, 2024 09:09

பாஜகவின் கொள்கைகள் ஒளிவு மறைவில்லாத, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கோட்பாடுகளை கொண்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் உயர்ந்த சிந்தனையின் அடிப்படையிலான சமதர்ம சித்தாந்தமும், நமது பண்பாட்டு, கலாச்சார பாதுகாப்பில் உறுதியும் கொண்ட ஒரே இயக்கம் பாஜக சமத்துவத்தை முன்னேடுத்தாலும் வாக்கு வங்கி அரசியலுக்காக போலி மதவாதங்களை ஒரு போதும் ஆதரித்ததுமில்லை தேச நலனை எதற்காகவும் யாருக்காகவும் சமரசம் செய்து கொண்டது மில்லை. பாரம்பரியம் மிக்க நம் பாரதத்தின் வளர்ச்சியும், உலக அரங்கில் எழுச்சியுமே நமது கடமை என இயங்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் ஊழலற்ற நிர்வாகமே இதற்கு சான்று. இதையெல்லாம் மக்களிடம் குறிப்பாக இளைஞர்கள் முதல் கலைஞர்கள் வரை, மாணவ நண்பர்கள் முதல் மீனவ நண்பர்கள் வரை, ஏர் உழவர் முதல் சீர் மறவர் வரை, பொருட்களை விற்பவர் முதல் விற்பன்னர்கள் வரை எடுத்து சொன்னாலே போதும் பாஜக மென்மேலும் வளர்ச்சியடைவதை யாராலும் தடுக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது


Oviya Vijay
நவ 21, 2024 09:07

அப்படி ஒரு நாள் என்றைக்குமே தமிழகத்தில் வரப்போவதுமில்லை... நீங்கள் குறிப்பிட்டது போல் அதிக உறுப்பினர்களை சேர்த்து அதற்கு பரிசாக முக்கியப் பொறுப்புகள் யாரும் உங்களிடமிருந்து பெறப்போவதுமில்லை... நடக்காத ஒன்று... வேண்டுமானால் தமிழகத்தில் உங்கள் கட்சியின் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக ராஜ்யசபா சீட் எனும் பின்வாசல் வழியாக உங்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு முறையாக பதவி பெறுவதற்கு ஏற்ற தலைவர்கள் என்று சொல்லுமளவிற்கு யாரும் தமிழக பிஜேபியில் இல்லை...


hari
நவ 21, 2024 09:23

இதோ வந்துட்டான் ரூபாய் 200 மதிப்புள்ள ஓவிய முட்டு


Mani . V
நவ 21, 2024 06:31

இந்தியாவுக்கு வெளியிலும் சேர்க்கலாமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை