உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வில் சேர்ந்து கொள்ளலாம்: விஜய்க்கு எச்.ராஜா அட்வைஸ்!

தி.மு.க.,வில் சேர்ந்து கொள்ளலாம்: விஜய்க்கு எச்.ராஜா அட்வைஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கிறார் நண்பர் விஜய். அவரது தீர்மானத்தை பார்க்கும் போது, தி.மு.க.,வில் போய் சேர்ந்து கொள்ள சொல்லலாம் போல் இருக்கிறது' என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.சென்னை, கமலாலயத்தில் நிருபர்கள் சந்திப்பில் எச்.ராஜா கூறியதாவது: இப்போது புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கிறார் நண்பர் விஜய். அவர் சில தீர்மானங்கள் போட்டு இருக்கிறார். தீர்மானத்தை பார்க்கும் போது, தி.மு.க.,வில் போய் சேர்ந்து கொள்ள சொல்லலாம் போல் இருக்கிறது. தி.மு.க., சொன்னதையே சொல்கிறார். நீட் தேர்வு கொண்டு வந்தது யார்? 2010ல் நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி ஆட்சி தான். 2013ல் முதல் முறையாக நீட் தேர்வு நடத்தியது யார்? ஜெயலலிதா ஒரு வருடம் விலக்கு கேட்டார்.

எப்படி B டீம் ஆவார்?

இரண்டாவது வருடம் விலக்கு கேட்ட போது, சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சுப்ரீம் கோர்ட் நீட் தேர்வை நடத்த வேண்டும் என கூறியது. மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று கூறும் விஜய் எப்படி பா.ஜ.,வின் B டீம் ஆவார்? முதலில் சீமானை கூறியவர்கள், இப்போது விஜயை கூறுகிறார்கள். இத்தனை B டீம்களை கட்சி தாங்காது. தி.மு.க.,வின் நிலைமை தவளை தண்ணீருக்குள் இருந்த மாதிரி உள்ளது. ஏதாவது ஒன்று கிடைக்காதா? தல கிடைக்காதா? அஜித் கிடைக்க மாட்டாரா? என்று தி.மு.க., முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு எச்.ராஜா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Mani . V
நவ 05, 2024 06:16

சரி, உங்கள் கட்சிக்கு என்று ஏதாவது கொள்கை இருக்கிறதா


தமிழ்வேள்
நவ 04, 2024 20:39

ஒருபடி நிச்சயம் மூணுபடி லட்சியம் ன்னு உருட்டி திரிஞ்ச சீனியர் ஊபியின் உடன்பிறவாத புளுகுணி டுபுக்கு கட்சி இயக்கத்தில் நடிக்கிறார் சோசப்பு... இயக்குனர் சொன்னது சொன்னபடி ஆடினால் தான் கோமாளி வேசம் போட்டதால் பேமெண்ட் கிடைக்கும்..ஒப்பந்தத்தை மீறி முடியாதே?


அப்பாவி
நவ 04, 2024 18:10

அவரை கெடக்கட்டும். நீங்க எந்தெந்த குதிரைகள் மேல சவாரி செய்யப் போறீங்க?


vadivelu
நவ 04, 2024 18:16

பலன் தரும் குதிரையைத்தான் எல்ல அரசியல் கட்சிகளும் தேடும்.


Suppan
நவ 04, 2024 16:11

வக்ப் போர்டு சட்டத்திருத்த மசோதாவை வாபஸ் வாங்க வேண்டுமாமே? விஜயின் நீலாங்கரை பங்களா, மற்ற சொத்துக்களுக்கு வக்ப் போர்டு பாத்தியதை கொண்டாடினால் என்ன செய்வார்? லொயோலா கல்லூரி ஆசாமிகள் உதவிக்கு வருவார்களா ?


S. Venugopal
நவ 04, 2024 16:08

சினிமா துறையிலிருந்து வருபவர்கள் எல்லாம் தமிழக மாணவர்கள் ஹிந்தி கற்க வேண்டாம் என நினைக்கிறார்கள். தமிழர்களுக்கு ஹிந்தி தெரிந்தால் மற்ற மாநிலங்கள் போல தமிழ் நாட்டிலும் ஹிந்தி படங்களுக்கு வரவேற்பு கூடி தமிழ் படங்களுக்கு வசூல் குறைந்து விடும் என்ற அச்சாமோ?


Palanisamy T
நவ 04, 2024 22:46

ஏன் தேவையில்லாமல் திரையுலகத்தை வீண் வம்பிற்குள் இழுக்கிண்றீர்கள். ஹிந்தி கற்பது வேறு, படிப்பது வேறு . தமிழ் ஆங்கிலம் கற்க வேண்டிய மொழிகள் .ஒன்று மெய்யறிவு மொழி மற்றது அறிவியல் மொழி . தமிழர்களுக்கு ஹிந்தி தெரிந்தால் மற்ற மாநிலங்களை போல் ஹிந்தி படங்களுக்கு நல்ல வரவேற்பா , நல்ல வசூலா? உங்களால் பட்டியல் போட முடியுமா? உங்களால் முடிந்தால் கவர்ச்சி நடிகைகளேயில்லாத நல்ல ஹிந்திப் படங்களை தேர்வுச் செய்து இந்த மாநிலங்களுக்கு அனுப்ப சொல்லுங்கள் அப்போது தெரியும் எவ்வளவு என்று தெரியும்.


Vinodh A
நவ 05, 2024 02:58

நல்ல காமெடி பதிவு


R K Raman
நவ 05, 2024 04:27

ஆனால் இவர்கள் மட்டும் ஹிந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டி அலைவார்கள். ஹிந்தி சரளமாக பேசி ஆனால் ஹிந்தி தெரியாது போடா என்று தமிழ் வளர்ப்பது போல.. காக்கா முட்டைகள்


S. Venugopal
நவ 04, 2024 15:45

எல்லா சினிமா வழி வந்தவர்கள் எல்லாம் மாணவர்கள் ஹிந்தி கற்கவேண்டாம் என்று வலியுறுத்துவது தமிழ் நாட்டில் எல்லோருக்கும் ஹிந்தி தெரிந்தால் தமிழ் நாட்டில் மற்ற மாநிலங்கள் போல களுக்கு சினிமாக்க்களுக்கு வரவேற்வரvarppu


Smba
நவ 04, 2024 15:43

ஏன் உனக்கு காண்டா


வைகுண்டேஸ்வரன்
நவ 04, 2024 15:42

விஜய் வரும்போதே திமுக வை எதிர்க்கிறார் என்கிறார் ஸ்டாலின். விஜய் திமுக வில் சேர்ந்து கொள்ளலாம் என்கிறார் எச் ராஜா. சீமான் என்னடான்னா விஜய் யை கூமுட்டை என்கிறார். இ பி எஸ் வழக்கம் போல சம்பந்தமே இல்லாமல் வேற எதையோ பேசிண்டிருக்கார். விஜய் என்ன சொல்லப்போறார்?


Kundalakesi
நவ 04, 2024 15:41

மக்கள் கமலை கொண்டாடியது போல இப்போதே விஜயை கொண்டது கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.


Ms Mahadevan Mahadevan
நவ 04, 2024 15:11

விஜய் புதிதாக ஏதாவது அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அப்பிடினா எல்லோரும் சமம். ஆனா பேங்க் லோன் வாங்கப் போனாலே என்ன ஜாதி பின் தங்கியவரா முன் தங்கியவரா பட்டியலா என்று கேள்வி அதற்கு ஏறார் போல வட்டி விகிதம் சப்சிடி இப்படி பல. அரசியல் அமைப்பு எண்ண சொல்லுது இந்தியர்கள் அனைவரும் சமம். இதில் இங்கு சமம் உள்ளது. இவை போன்றவற்றை மாற்றுவார் என்று பார்த்தால் திமுக வின் அதே போலி சமூக நீதி என்கிறார். நீட் வெண்ட்டம் என்கிறார். ஆளுநர் வேண்டாம் என்கிறார். எனவே நீங்கள் சொன்னமாதிரி விஜய் திமுக வில் ஐக்கியம் ஆகிவிடலாம் உலக நாயகன் கமல் போல


Duruvesan
நவ 04, 2024 15:40

அது நடக்கும், சீடர்கள் ஒன்று சேர்வது காலத்தின் கட்டாயம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை