உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டவுட் தனபாலு: கடவுள் நம்பிக்கையே இல்லாத நீங்க இப்படி பேச ஆரம்பிச்சுட்டீங்களே!

டவுட் தனபாலு: கடவுள் நம்பிக்கையே இல்லாத நீங்க இப்படி பேச ஆரம்பிச்சுட்டீங்களே!

நீலகிரி தி.மு.க., - எம்.பி.,ராஜா:

மலைப்பாகவும் இருக்கிறது; வியப்பாகவும் இருக்கிறது; மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தலைவர் கருணாநிதியோடு பயணித்தோம்; முதல்வர் ஸ்டாலினுடன் பயணித்தோம். இப்போது, உதயநிதியுடன் பயணிக்கிறோம். மூலவராக ஸ்டாலின் இருந்து ஆட்சி, கட்சியை நடத்துகிறார்; உற்சவராக உதயநிதி பணியாற்றுகிறார்.

டவுட் தனபாலு:

கடவுள் நம்பிக்கையே இல்லாத நீங்க, மூலவர், உற்சவர்னு பேச ஆரம்பிச்சுட்டீங்களே... 'எல்லா கோவில்லயும், மூலவரும், உற்சவரும் எந்த காலத்துலயும் மாறவே மாட்டாங்க... அதே மாதிரி, தி.மு.க., தலைமை பதவியும் ஒரே குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது' என்பதை தான் இப்படி நாசுக்கா குத்திக் காட்டுறீங்களோ என்ற, 'டவுட்' வருது!---

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன்:

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தை, எதற்காக அவசர அவசரமாக மூடினர் என மக்களுக்கு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. அடிப்படை வசதி மற்றும் முன்னேற்பாடு இல்லாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசரமாக திறந்து வைத்தது, தி.மு.க., அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது.

டவுட் தனபாலு:

தமிழகத்துல எல்லா ஊர்களிலும், புதிய பஸ் நிலையங்கள் திறந்தாலும், பழைய பஸ் நிலையங்களும் பயன்பாட்டில் இருக்குது... ஆனா, நகரின் மையத்தில் இருக்கும் கோயம்பேடு பஸ் நிலையத்தை, அவசர அவசரமா மூடியிருப்பது, தனியார் நிறுவனத்துக்கு தாரைவார்க்க போறாங்களோ என்ற, 'டவுட்'களை எழுப்புது!---

சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் கிடையாது. மதுக்கடைகளை படிப்படியாகக் குறைக்கலாம்; திறக்கும் நேரத்தை குறைக்கலாம். இதைத் தவிர பூரண மதுவிலக்கு என்பது முடியாத காரியம். அவ்வாறு செய்தால், கள்ளச் சந்தையில் மது விற்பனை அதிக அளவில் வளர்ந்து விடும்.

டவுட் தனபாலு:

அரசு நினைத்தால், முடியாத காரியம் எதுவும் உள்ளதா என்ன... அப்பாவி பெண்களின் தாலியை காப்பாற்றும் எண்ணம் அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இருந்தால், பூரண மதுவிலக்கு என்பது, ஒரே கையெழுத்தில் முடியும் சங்கதி என்பதில், எந்த, 'டவுட்'டும் இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Narayanan
பிப் 13, 2024 16:12

எப்படிப்பட்ட நாத்திகனும் கடைசிக்காலத்தில் ஆஸ்திகனாக மாறித்தான் ஆக வேண்டும் . ராமானுஜர் சரித்திரம் எழுதினர் .


veeramani
பிப் 13, 2024 13:15

கோயம்பேடு பேருந்து நிலையம்..எவர் சொன்னது சென்னையின் நடுவில் என்று..ஒரு குறிப்பிட்ட ஏரியா மக்களுக்கு மட்டும்தான் அதிக பயனாயிற்று. என்னை போன்ற செட்டிநாடு பகுதியிலிருந்து சென்னை வரணும். கோயம்பேடு வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் தாம்பரம் செல்லவேண்டியவர்க்ளும் இதே கதைதான். பொதுவாகவே வடக்கு, தெற்கு என்பது அனைத்திலும் பாகுபாடு உள்ளது. தென் மாவட்ட மக்கள் விரைவில் சென்று வர கிளாம்பாக்கம் பேருந்து மிக வசதியாக இருக்கின்றது. ஒருசில என்னுள், திருவொற்றியூர் மக்களும், எகிரிக்கட்சிகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப்பற்றி கேலியும் கிண்டலும் பேசுகின்றனர். எவர் ஒருவர் புதியவீடு கட்டி குடி செல்லும்போது எல்லா வசதிகளும் கிடைப்பதில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் இரண்டு மாதத்தில் சரிசெய்யப்பட்டுவிடும். வாடா சென்னை மக்களுக்கு வீட்டில் சென்ரா ஏற்ற, இறக்கி விட முடியும். என்ன கேலிக்கூத்து. தென் மாவட்ட மக்கள் சார்பாக வேண்டுகோள். எங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாக செயல்படவேண்டும். மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லவே இல்லை.


sridhar
பிப் 13, 2024 11:18

வெட்கமாகவும் இருக்கிறது இப்படி ஒரு குடும்பத்துக்கு அடிமையாக இருக்க என்றும் சொல்லி இருக்கலாம்.


நரேந்திர பாரதி
பிப் 13, 2024 08:01

"மலைப்பாகவும் இருக்கிறது வியப்பாகவும் இருக்கிறது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தலைவர் கருணாநிதியோடு பயணித்தோம் முதல்வர் ஸ்டாலினுடன் பயணித்தோம். இப்போது, உதயநிதியுடன் பயணிக்கிறோம். மூலவராக ஸ்டாலின் இருந்து ஆட்சி, கட்சியை நடத்துகிறார் உற்சவராக உதயநிதி பணியாற்றுகிறார். "அடுத்தது, மூலவராக உதயநிதி/உற்சவராக இன்பநிதி, பின்னர் மூலவராக இன்பநிதி/உற்சவராக துன்பநிதி... முடிவில் மூலவராக துன்பநிதி/உற்சவராக துயரநிதி...இப்பிடித்தான் போகும்..உளுத்தம் பருப்புகளுக்கெல்லாம் கடைசி வரையில் கட்டை விரல்தான்


Duruvesan
பிப் 13, 2024 07:18

அடுத்து இன்பா அண்ணன் ஷூ polish போடுவார்.


S.kausalya
பிப் 13, 2024 06:57

ராமானுஜர் காவியம், ஆன்மீக பற்று உடைய Jagathrakshaganaal எழுத பட்டது என்றும், அதை kattumarathinaal கையகப்படுத்த பட்டது என்றும் solvaargal


raja
பிப் 13, 2024 06:19

தான் ஒரு திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்ப பரம்பரை கொத்தடிமை என்பதை எப்படி இந்த ஆண்டி முத்துராசு சொல்றான் பாருங்க...


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 13, 2024 03:06

கட்சித் தலைமைக்கு ரொம்ப வேண்டியவர் ஆ ராசா ...... அதாவது கலைஞர் அவரை தம்பி என்று சொல்லி வந்தார் ..... ஆகவே ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு அவர் சித்தப்பா முறை ......


sankaranarayanan
பிப் 13, 2024 01:56

சனாதன தர்மத்தை கடைபிடிக்க வந்துவிட்டார் நீலகிரி அரசர் வாழ்த்துக்கள் இனியாவது திருந்துங்கள் தேர்தல் வரும் சமயம் மூலவர் உற்சவர் என்றெல்லாம் கூறி குயில்களில் இருவர்தான் உள்ளனர் யாரு அப்போ மூன்றாவதாக யாரை குறிப்பிடுகிறார் இன்பனையா?


(null)
பிப் 13, 2024 01:54

Next Inba


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை