உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றியை கொண்டாடும் பார்ட்னர்களை பார்ப்பீர்கள்; முதலீட்டாளர்களை குஷிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்

வெற்றியை கொண்டாடும் பார்ட்னர்களை பார்ப்பீர்கள்; முதலீட்டாளர்களை குஷிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஜெர்மனி முதலீட்டாளர்கள் தமிழகம் வரும் போது, பிசினஸ்க்கான மார்க்கெட்டாக மட்டும் பார்க்க மாட்டீர்கள்; உங்களுடன் இருந்து உங்களுடைய வெற்றியை கொண்டாடுகிற பார்ட்னர்களை பார்ப்பீர்கள்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். ஜெர்மனியில் தமிழக தொழில் துறை ஏற்பாடு செய்திருந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஜெர்மனி போலவே தமிழகத்திற்கு பெரிய வரலாறும், பாரம்பரியமும் உள்ளது. தமிழும், ஜெர்மனியும் உலகின் பழமையான மொழிகளில் முக்கியமானவை. ஜெர்மனியின் பண்பாடு, தொழில் நுணுக்கம், புத்தாக்க வலிமை போன்றவை வியப்பை ஏற்படுத்துகின்றன. ஜெர்மனியின் கலை உணர்வை ஒவ்வொரு கட்டடத்திலும், தெருக்களிலும் பார்த்து நான் ரசிக்கிறேன். தமிழகத்திலும், பல ஜெர்மனி நிறுவனங்கள் தொழில் நடத்தி வருகின்றன. இந்தியாவிடம் வணிக உறவு கொள்ளும் முதன்மையான நாடு ஜெர்மனி. எப்படி, 'மேட் இன் ஜெர்மனி' என, தரத்தின் அடையாளமாக உலகம் முழுதும் பார்க்கிறார்களோ, அப்படியே, 'மேட் இன் தமிழ்நாடு' என்பதும் தரமும், திறனும் கொண்ட ஒரு பெயராக உருவாகி கொண்டிருக்கிறது. இந்தியாவில் தொழில் துறையின் இதய துடிப்பாக தமிழகம் விளங்குகிறது. இன்னும் சொன்னால், தமிழகம் தான் இந்தியாவின் ஜெர்மனி. முன்னணி உயர் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமின்றி, 54 லட்சம் குறு, சிறு தொழில் நிறுவனங்கள், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. திறன் மேம்பாட்டிலும், நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி கொண்டிருக்கிறோம். உலக தரச்சான்று பெற்ற திறன் மேம்பாட்டு மையங்களை தொழிலகங்களுடன் இணைத்து, இளைஞர்களை உலக அளவுக்கு தகுதியானவர்களாக உருவாக்கி கொண்டிருக்கிறோம். ஜெர்மனியின் பயிற்சி நுணுக்கங்களும், நுட்பங்களும் எங்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கின்றன. நான் இங்கே வெறும் முதலீட்டுக்காக மட்டும் வரவில்லை. ஜெர்மனி - தமிழகம் ஆகிய இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே, ஒரு பாலம் அமைக்க வந்திருக்கிறேன். தொழில் மற்றும் தொழில்நுட்பத்தில் ஜெர்மனியின் துல்லியத்தையும், தமிழகத்தின் ஆற்றலையும் இணைத்தால், உலகளவில் ஒரு புதிய வளர்ச்சி பாதையையும், ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே ஒரு வலுவான வர்த்தக பாலத்தையும் உருவாக்க முடியும். வணிகம் செய்வதை எளிதாக்கும் தரவரிசையில், இந்திய அளவில் தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு அனைத்து வசதிகளையும், தி.மு.க., அரசு வழங்கி கொண்டு வருகிறது. தமிழகத்தில் தொழில்களை துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு, தமிழக அரசு காத்திருக்கிறது. ஜெர்மனி முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு வரும் போது, தமிழகத்தை உங்கள் பிசினஸ்க்கான மார்க்கெட்டாக மட்டும் பார்க்க மாட்டீர்கள். உங்களுடன் இருந்து உங்களுடைய வெற்றியை கொண்டாடுகிற பார்ட்னர்களை பார்ப்பீர்கள். பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும், திறன்மிக்க மனித வளத்தையும் உறுதி செய்வதுடன், பல்வேறு தொழில் கொள்கைகளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க இருக்கிறோம். எனவே, ஜெர்மனி முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Chandru
செப் 03, 2025 12:24

இவனால் இப்படி எல்லாம் எப்படி பேச முடிகிறது ? இவ்வளவு செயற்கையாக யாரோ எழுதி கொடுத்த துண்டு சீட்டை படிக்கும் போது கூட சுடலைக்கு தெரியவில்லையே ???


ராமகிருஷ்ணன்
செப் 03, 2025 11:28

லாபத்தில் பங்கு பெருபவர்கள் தான் பார்ட்னர்கள். திமுக ஓப்பனாக சொல்லி விட்டது. அரசு இடம் கரண்ட், தண்ணீர் இலவசமாக அளிக்கப்படும். அதுதான் திமுகவின் முதலீடு. லாபம் குடும்பம் வாங்கி கொண்டு அமுக்கிவிடும். நல்ல திட்டம். மக்களுக்கு அல்வா.


Madras Madra
செப் 03, 2025 11:09

எல்லாம் பேசி முடிச்சி குஷியா இருக்காரு முதல்வரு ஏற்கனவே பல தலைமுறைக்கு சேர்த்தாச்சி இப்ப எத்தனை யுகம் தாண்டியும் பிரச்சினை இல்லைன்ற அளவுக்கு பதுக்கியாச்சு போல


V RAMASWAMY
செப் 03, 2025 10:20

ஜெர்மனியையும் தமிழ்நாட்டையும் ஒப்பிடுவது தமிழ்நாடு எதோ ஒரு தனி நாடு போன்ற மாயையைத்தான் உண்டாக்குகிறது. மாநிலங்கள் மற்ற நாடுகளில் முதலீடு ஈர்க்கச்செல்லும்பொழுது மத்திய அரசின் வணிகத்துறை பிரதிநிதி இல்லாமால் செல்லக்கூடாதென்றும் மாநில அரசு பிரதிநிதிகள் தன்னிச்சையாக எவ்வித அறிவிப்பும் செய்யக்கூடாதென்றும் விதிமுறைகள் வரவேண்டும்.


Sun
செப் 03, 2025 10:01

தலிவரு ஜெர்மன் கம்பெனிகளுடன் பார்ட்னர்ஷிப் போடப் போறத நைசா சொல்றாரு.


Shivakumar
செப் 03, 2025 11:48

இவரு பார்ட்னெர்ஷிப் போட்ட கம்பெனிகள் எல்லாம் ஏற்கனேவே தமிழ்நாட்டில் இருக்கின்றது. அந்த கம்பெனியோட விரிவாக்கத்திற்கு தான் கையெழுத்து போட்டு இருக்கார். இதில் பெருமை வேற...


D Natarajan
செப் 03, 2025 08:13

30% பக்கா


VIDYASAGAR SHENOY
செப் 03, 2025 07:25

தண்ணி கலக்காத ஒரு உருட்டு


Mani . V
செப் 03, 2025 06:29

அந்த பார்ட்னர்கள் முதல்வர் குடும்பம்தானுங்களே பாஸ்?


suresh Sridharan
செப் 03, 2025 06:07

அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் நீங்கள் தமிழ்நாட்டிற்கு முதலீடு கொண்டு வர செல்லவில்லை முதலீடு செய்ய சென்றுள்ளீர்கள் நீங்கள் சொன்ன அந்த வார்த்தை சரிதான் பார்ட்னர் அவர்கள் உங்களுக்கு பாடினார் உண்மையைத்தானே சொல்கிறீர்கள் இங்கிருக்கும் அனைத்து எதிர்கட்சிகளும் செல்லும் வார்த்தை நீங்கள் அங்கிருந்து முதலீடு கொண்டு வரவில்லை இங்கிருந்து அவர்களுக்கு முதலீடு இங்கே அதே முதலீடு வைத்து பார்ட்னர் அதுதான் சொன்னீர்களே பாட்னா அப்போ பொருள் உங்களுடையது நாளும் நாடும் நாட்டு மக்களும் நாசமாகி போகட்டும்


sankar
செப் 03, 2025 04:34

தப்பி தவறி திமுக வெற்றி பெற்றால் கற்பனை பண்ணும்போது பயமாயிருக்கு ஜெர்மன் பங்காளிங்க வந்து குத்தாட்டம் போடுவார்களா?? இல்லை மந்திரி சபையில் இடம் பெறுவார்களா


சமீபத்திய செய்தி