உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாகன கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய வாலிபர்கள் கைது

வாகன கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய வாலிபர்கள் கைது

கூடலுார்: கூடலுார் அருகே, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மூன்று வாகனங்களின் கண்ணாடிகளை சேதப்படுத்திய, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், கூடலுார் – ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, ஹெல்த் கேம் அருகே, அக்., 1 இரவு, இரண்டு லாரி மற்றும் ஒரு காரை நிறுத்தி சென்றுள்ளனர். நேற்று முன்தினம், காலை வாகன உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது, வாகனங்களில் கண்ணாடிகள் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசில் புகார் கூடலுார் இன்ஸ்பெக்டர் பவுலோஸ், எஸ்.ஜ., கவியரசு, ஷர்புதீன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, வாகனங்களின் கண்ணாடியை சேதப்படுத்தியது தொடர்பாக, முதல் மைல் பகுதியை சேர்ந்த அப்னாஸ், 22, அப்சல், 21, கூடலுாரை சேர்ந்த யுவராஜ், 25, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், மதுபோதையில் நள்ளிரவு, 1:00 மணிக்கு அப்பகுதியில் உலா வந்த மூவரும், மற்றவர்கள் தங்களை பார்த்து அச்சப்படும் வகையில், ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என, முடிவு செய்து, வாகனங்களில் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை