உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண் ஏட்டை தாக்கிய இளைஞர் கைது

பெண் ஏட்டை தாக்கிய இளைஞர் கைது

தஞ்சாவூர்:குடும்ப தகராறை சமாதானப்படுத்த வந்த பெண் ஏட்டுவை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர், கரந்தையை சேர்ந்தவர் கார்த்திகேயன், 25. இவர், நேற்று பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தன் மனைவி, தாயுடன் தகராறு செய்தார். அப்போது, அங்கு பணியில் இருந்த மேற்கு போலீஸ் ஸ்டேஷன் பெண் ஏட்டு கனிமொழி, 36, மற்றும் சக போலீசார், கார்த்திகேயனை சமாதானம் செய்து, கலைந்து செல்லுமாறு கூறினர். இதில், ஆத்திரமடைந்த கார்த்திகேயன், டூ - வீலர் சாவியால், கனிமொழியின் முகத்தில் குத்தி, தாக்கினார். இதில், கனிமொழி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கனிமொழி அளித்த புகாரில், போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !