உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமியிடம் சில்மிஷம் செய்த இளைஞர் கைது

சிறுமியிடம் சில்மிஷம் செய்த இளைஞர் கைது

புதுடில்லி:மத்திய டில்லியில், பள்ளி முன், சிறுமியிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.மத்திய டில்லியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் சிறுமிக்கு, சமூக ஊடகம் வாயிலாக ஒரு இளைஞர் அறிமுகம் ஆனார். இரண்டு ஆண்டுகளாக இருவரும் சமூக ஊடகத்திலேயே நட்பை தொடர்ந்தனர். சிறுமியின் வீட்டுக்கும் இளைஞர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.இந்நிலையில், சிறுமி படிக்கும் பள்ளி அருகே நேற்று முன் தினம் இளைஞர் காத்திருந்தார். பள்ளி முடிந்து வெளியே வந்த சிறுமியிடம் ஆபாசமாக பேசி, சில்மிஷம் செய்தார். அங்கிருந்த சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், இளைஞரையும் சிறுமியையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.சிறுமி அளித்த வாக்குமூலத்தில், 'இருவரும் நெருங்கிய உறவில் இருந்ததாகவும் சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும்' கூறினார்.போக்சோ மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி