விமானப்படையில் வேலை இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: இந்திய விமானப்படையில் சேர, ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இந்திய விமானப்படையில் தொழில்நுட்ப பிரிவிலும், தொழில்நுட்பம் அல்லாத பிரிவிலும், 'ஏ கிரேடு' அதிகாரிகளாக பயிற்சி பெற ஆர்வமுள்ள, ஆண், பெண் இன்ஜினியரிங் மற்றும் பிற அறிவியல் பட்டதாரிகள், இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வான்வழி பிரிவுக்கு, 20 முதல் 24 வயதுக்குள் உள்ளவர்களும், தரைவழி தொழில்நுட்ப பிரிவில் சேர, 26 வயது வரை உள்ளோரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 வகுப்பிலும், முதுகலை பட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை, 'https://afcat.cdac.in/AFCAT/' என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்.