உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  யூ டியூபர், தி.மு.க., - எம்.பி., மகனுக்கு குண்டாஸ்

 யூ டியூபர், தி.மு.க., - எம்.பி., மகனுக்கு குண்டாஸ்

சென்னை: தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா மகன் சூர்யா மற்றும் யூ டியூபர் முக்தார் அகமது ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பா.ஜ., நிர்வாகி அலிஷா அப்துல்லா மற்றும் அவரது இரட்டை குழந்தைகள் குறித்து அவதுாறாக பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா மகன் சூர்யா, யூ டியூபர் முக்தார் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்படி, சூர்யா மற்றும் முக்தார் அகமது ஆகியோரை, சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை