உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெகவில் இணைந்தார் யுடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு

தவெகவில் இணைந்தார் யுடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு

சென்னை: சென்னை பனையூரில் விஜயை சந்தித்து பேசிய பிரபல யுடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். இவரது கட்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் விஜயை சந்தித்து தவெகவில் இணைந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cifhctit&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத்தொடர்ந்து, இன்னும் பலர் தவெகவில் இணைய இருப்பதாக ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கூறியிருந்தார். இந்த நிலையில், பனையூரில் விஜயை நேரில் சந்தித்த பிரபல யுடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு, தவெகவில் இணைந்து கொண்டார். இந்த நிலையில், தவெகவில் இணைந்தது குறித்து பெலிக்ஸ் ஜெரால்டு வெளியிட்ட சமூகதளப்பதிவில்; 51 வயதான நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக உருவாக்கிய தொழில் பொறுப்புகளில் இருந்து விலகி, அடுத்த தலைமுறைக்கான புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரு இயக்கத்தில் இணைந்துள்ளேன். தமிழகத்தின் எதிர்காலமாகவும், நம்பிக்கையாகவும் கருதப்படும் விஜயை சந்தித்ததில் மகிழ்ச்சி. விஜய் நிச்சயம் நாம் இதை செய்து முடிப்போம், எனப் பதிவிட்டுள்ளார்.யுடியூபர் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்தது தொடர்பான வழக்கில் இவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Krishnaswame Krishnaswame
டிச 21, 2025 21:08

இனம் இனத்தோடு சேர்ந்தது இயற்கையே


kumarkv
டிச 21, 2025 20:48

கிரிஸ்டியன் கும்பல்


s vinayak
டிச 21, 2025 19:24

ஜெரால்டு ஜோசப்புடன் இணைவதில் ஆச்சரியமில்லை.


Govi
டிச 21, 2025 18:51

காசு வாங்கி இருப்பார்


Muthukumaran Varadarajan
டிச 21, 2025 18:42

ஆச்சார்யம் ஒன்றும் இல்லை.


புதிய வீடியோ