உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்த பள்ளி மாணவன்: ஜாகிர் உசேன் கொலையில் அதிர்ச்சி!

கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்த பள்ளி மாணவன்: ஜாகிர் உசேன் கொலையில் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நெல்லை; நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ., ஜாகிர் உசேன் பிஜிலி கொலையில், கொலையாளிகளுக்கு துப்பு கொடுத்த பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. ஓய்வுபெற்ற எஸ்.ஐ. அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் அவர் முத்தவல்லியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த ஜாகிர் உசேனை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v8g5yjod&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் போலீசாரின் விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும், ஜாகிர் உசேனுக்கும் இடையே இருந்த நிலத்தகராறு கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி என்கிற தவுபீக், கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உறவினரான பள்ளி மாணவன் ஒருவன் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. அந்த சிறுவன் டவுனில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார். அவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று ஜாகிர் உசேன் பிஜிலி தொழுகையை முடித்துவிட்டு புறப்படுவதை கொலையாளிகளுக்கு மொபைல்போன் மூலமாக தெரிவித்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பள்ளி மாணவனை போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி என்கிற தவுபீக்கின் மனைவி நூர்நிஷா இன்னமும் தலைமறைவாகவே உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

kumarankumaran
மார் 24, 2025 07:07

எடுத்தாரா


Padmasridharan
மார் 22, 2025 21:37

அந்த சிறுவன் கொலை நடக்கும் என்பது தெரிந்து சொன்னாரா, இல்லை கொலையாளிகள், இவரை வேறு மாதிரி சொல்லி பயன்படுத்தினரா. .


தமிழ்வேள்
மார் 22, 2025 16:07

வக்ப் பெயரால் இஸ்லாமியரது பூர்விக சொத்தே ஆட்டையை போடப்பட்டதை பொறுக்க இயலாமல் ஒரு கொலை .....அப்போது அந்த வக்ப் என்பதே இருக்கக்கூடாது தானே ? வக்ப் மூலம் சொத்துக்கள் அநியாயமாக சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கும் வேலை மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது ....


Anantharaman Srinivasan
மார் 22, 2025 15:52

பள்ளி மாணவன் ஒருவன் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. விளையும் பயிர் முளையிலேயே அமோகமாக வினை புரிகிறது. வருங்கால நக்சலைட். .


வாய்மையே வெல்லும்
மார் 22, 2025 14:50

கிருஷ்ண மூர்த்தி என்கிற குல்லா பாயாம் கைதி கண்ணாயிரம் என்கிற உத்தமர் மாதிரி .. என்னய்யா டகாலடி வேலைய இருக்கே..


Varadarajan Nagarajan
மார் 22, 2025 14:48

"கிருஷ்ணமூர்த்தி என்கிற தவுபீக்" இதுயென்ன புது ரூட்டா தெரியுது.


अप्पावी
மார் 22, 2025 15:50

இதுக்கு முன்னாடி காதர் பாட்சாவா இருந்தாராம். அதுக்கும் முன்னாடி முத்துராமலிங்கமாம்.


நரேந்திர பாரதி
மார் 22, 2025 14:07

விளையும் பயிர் ஆல விருட்சமாக வளர பெரும் வாய்ப்பு


shakti
மார் 22, 2025 13:51

தவுபிக்கை தவுபிக் என்று மட்டும் சொன்னால் போதாதா ? பழைய பெயரை ஹைலைட் செய்கிறீர்கள் ?


kamal 00
மார் 22, 2025 14:23

உல்ட்டா


Anantharaman Srinivasan
மார் 22, 2025 15:48

பழைய பெயரை high light செய்தால் தானே நிலத்தை அபகரிக்க மதம் மாறியவரென்று தெரியவரும்.


chennai sivakumar
மார் 22, 2025 13:36

இப்போ தகவல் கொடுத்து உள்ளார் அதனுடைய விளைவுகள் தெரிந்தோ தெரியாமலேயே. அடுத்தது இவர்களே கதையை முடித்தாலும்.ஆச்சரிய படுவதற்கு இல்லை.omg


சமீபத்திய செய்தி