உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கடாபி இன்னும் லைனில் இருக்கிறார்

கடாபி இன்னும் லைனில் இருக்கிறார்

டமாஸ்கஸ்:'லிபியாவில் இருப்பது மக்கள் ஆட்சி. அதை யாராலும் அகற்ற முடியாது. 'நேட்டோ'வின் ஆதரவு நீண்ட நாள் நீடிக்காது' என, தலைமறைவாக உள்ள லிபியா முன்னாள் தலைவர் கடாபி ஆவேசமாகப் பேட்டியளித்துள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., தலைமையகத்தில் லிபியா இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தபா ஜலீல் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா இருவரும் நேற்று சந்தித்துப் பேசினர். தொடர்ந்து, ஐ.நா., பொதுச் சபையில் லிபியா விவகாரம் இடம் பெற்றது.

இந்நிலையில், சிரியாவில் ஒளிபரப்பாகும், அல் ராய், 'டிவி'யில், தலைமறைவாக உள்ள லிபியா முன்னாள் தலைவர் கடாபியின், 'ஆடியோ' பேட்டி நேற்று ஒலிபரப்பானது.அதில்,'லிபியாவில் இருப்பது மக்கள் ஆட்சி. வான் மற்றும் கடல்வழித் தாக்குதல் மூலம் ஒரு நாட்டின் ஆட்சியைத் தூக்கி எறிந்து விட்டு இன்னொரு ஆட்சி திணிக்கப்படுவதை யாரும் நம்பிவிடாதீர்கள். லிபியாவின் மக்கள் ஆட்சியை யாராலும் அகற்ற முடியாது. 'நேட்டோ'வின் ஆதரவு நீண்ட நாள் நீடிக்காது' என, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி