உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காட்டுமிராண்டிகள், விலங்குகள்: புலம் பெயர்ந்தவர்களை வசை பாடிய டிரம்ப்!

காட்டுமிராண்டிகள், விலங்குகள்: புலம் பெயர்ந்தவர்களை வசை பாடிய டிரம்ப்!

நியூயார்க்: அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் காட்டுமிராண்டிகள், விலங்குகள் என முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வசை பாடினார்.அமெரிக்காவில் நவம்பர் 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிசை, டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடி வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது.

மரண தண்டனை

இந்நிலையில், அரோராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது: அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்துள்ளது. இதனை, துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆதரிக்கிறார். அவர் ஒரு குற்றவாளி. சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் காட்டுமிராண்டிகள், விலங்குகள். அமெரிக்க குடிமகன் அல்லது சட்ட அமலாக்க அதிகாரியை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு

சட்டவிரோதமாக குடியேறியவர்களை எங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றுவோம். நவம்பர் 5ல் நடக்க உள்ள அமெரிக்கத் தேர்தலில், நான் வெற்றி பெற்றால், சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rajathi Rajan
அக் 12, 2024 19:27

ட்ரம்ப் ... என்ன தான் அடித்து விரட்டினாலும் நமது வம்சாம் வெளியேறாது,,,


Kanns
அக் 12, 2024 15:40

Has Any European Whites Entered Americas With Red-Indians Visa???Americas Belongs to RedIndians& Mayans But Genocided by those Foreign Invaders. Increase their/Natives Population & Reserve 50% of all Jobs to them


Ramesh Sargam
அக் 12, 2024 13:04

அது போகட்டும், நீங்கள் மீண்டும் அதிபரானால் முதலில் உங்கள் நாட்டில் தொடர்ந்து நடக்கும் அந்த துப்பாக்கி சூடு பிரச்சினையை முற்றிலும் தடுத்து நிறுத்துவீர்களா..? கூறுங்கள் பார்க்கலாம்.


பேசும் தமிழன்
அக் 12, 2024 12:23

மார்க்க ஆட்களை உள்ளே அனுமதிக்கும் உங்களுக்கு..... அவர்கள் விரைவில் தங்கள் வேலையை காட்டுவார்கள்..... பிரான்ஸ் இப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டு இருக்கிறார்கள்.... பின்லேடன் மகனை கூட நாட்டை விட்டு வெளியேற சொல்லி இருக்கிறார்கள்.


ஆரூர் ரங்
அக் 12, 2024 11:48

இவருடைய மூதாதையர்கள் அமெரிக்க பூர்வகுடிகளான செவ்விந்திய மக்களிடம் விசா பெற்றா குடியேறினர்?


raja
அக் 12, 2024 11:41

அட போங்கப்பா... யாரும் சொல்லாத்தையா இவர் சொல்றார்... 25 வருடங்களுக்கு முன்பே தமிழனை தெலுங்கன் தச்சினாமூர்தி என்கிற கட்டுமரம் காட்டுமிராண்டி என்று கூறியதை தமிழனே எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு புலங்காகிதம் அடைய வில்லையா


Oru Indiyan
அக் 12, 2024 10:53

இந்தியாவில் இதே மாதிரி பேசினால் அவ்வளவு தான். காங்கிரஸ் தி.மு க மம்தா போன்றவர்கள் கொன்றே போட்டு விடுவார்கள்


தஞ்சை மன்னர்
அக் 12, 2024 10:39

அவரு சாடை மாடைய கமலா காரிஷையும் இந்தியர்களில் இப்படி முன்னணியில் இருப்பது குஜராத்தி கும்பல் தான் ஒருவேளை இப்படியும் இருக்குமோ - சந்தேக கோபாலு


Pandi Muni
அக் 12, 2024 12:27

வேற யாருக்கு இது பொருந்தும்


sundarsvpr
அக் 12, 2024 10:35

அமெரிக்க அதிபர் பேசியது தவறு என்றால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட வகுப்பினரை மட்டும் வெறுத்து வசை பாடும் கும்பலை எப்படி அழைப்பது?


Palanisamy Sekar
அக் 12, 2024 10:32

ட்ரம்பின் வசைவினில் ஒரு நியாயம் இருக்கின்றது. அமெரிக்காவில் நுழைந்ததே சட்டவிரோதமான செயலாகும். அப்படி இருக்கையில் சட்ட அமலாக்க அதிகாரியை கொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அங்கே ஜனநாயகம் என்கிற தடித்த போர்வையில் பலரும் சாலையில் இறங்கி போராடுவதும், சொந்த நாட்டின் பிரஜையை கொளல்வதும் தேசபக்தி உள்ள எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மம்தாவை போல கமலாவும் அந்நிய தேசத்துக்காரர்களை அணைத்துக்கொண்டு வாக்குகளுக்காக அவர்களை ஆதரிப்பதும் நிச்சயம் கடுமையாக கண்டிக்க தக்கது. எங்கோ போரிட்டால் சட்டவிரோத குடிநுழைவு நபர்கள் சாலையில் இறங்கி சாலைப்போக்குவரத்தை சீர்குலைப்பதும், தீவைக்கும் சம்பவங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கு மதம் தான் முக்கியம் என்றால் உங்கள் நாட்டுக்கே சென்று போராட்டம் நடத்துங்கள் உங்களை யாரும் தடுக்கப்போவதில்லை. இதுதான் அமெரிக்க பிரஜையின் குமுறல். அதனைத்தான் ட்ரம்ப் சொல்கின்றார் நேரிடையாக. தவறேதும் கிடையாது. சபாஷ் ட்ரம்ப். உங்களை தேர்வு செய்தால் தான் அவர்கள் உண்மையான தேசபக்தி மிக்க அமெரிக்கர்கள்.


Haja Kuthubdeen
அக் 12, 2024 12:44

டிரம்ப் பேசியது அனைத்து சட்டவிரோத குடியேறிகளைதான்.இதில் மதம் எங்கே சம்பந்தப்பட்டுள்ளது.


raja
அக் 12, 2024 16:35

விடியலின் தொப்புள் கொடி உறவுகள் தானே சாலை மறியல் போராட்டம் என்று அமெரிக்காவில் செய்கிறது உடன்பிறப்பே... உடனே மதம் எங்கிருந்து வந்தது என்று கேட்கிறாய்...


சமீபத்திய செய்தி