உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு தரைமட்டம்: 15 பேர் பலி: உக்ரைன் அட்டூழியம்

ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு தரைமட்டம்: 15 பேர் பலி: உக்ரைன் அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து தரைமட்டமானது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷ்யாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். மீட்புபணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகில் உள்ள கட்டடங்களும் இடிந்து விழும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் அந்த குடியிருப்பில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இது பற்றி பெல்கோரட் கவர்னர் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறியதாவது: இடிபாடுகளை அகற்றும் பணி நிறைவடைந்து விட்டது. உக்ரைனின் தாக்குதலில் அப்பாவி மக்கள் 15 பேரை இழந்திருக்கிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramaraj P
மே 14, 2024 07:43

கிட்டத்தட்ட 30 நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பணம் கொடுக்கிறது.


visu
மே 14, 2024 07:28

ரஷ்யா முறையாந தாக்குதல்களை மட்டுமே செய்கிறது இஷ்டத்துக்கு டாக்கிருந்தால் இந்நேரம் உக்ரைன் சரணடைந்திருக்கும்


kalyanasundaram
மே 13, 2024 19:29

போரினால் எதையும் சாதிக்க முடியாது என்பதை அறிந்தோம் இதுபோல போர் நடப்பது மனதில் சிலலொண்ணாத் துயரத்தைத் தருகிறது சண்டையில் ஒருவருக்கு வெற்றி வரலாம்ஆனால் சமீதானத்தில் இருவருமே வெற்றியடைவர்


rsudarsan lic
மே 13, 2024 18:45

வெறும் பேர் தானா? அக்கிரமம் தான்


J.V. Iyer
மே 13, 2024 16:33

உக்ரைனை ரஷ்யா வீழ்த்த இவ்வளவு நாக்கு தள்ளுவது வியப்பாக உள்ளது


R S BALA
மே 13, 2024 19:25

அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு உதவுகின்றனவே அதனை கவனியுங்கள் ரஷ்யா தனித்துதான் போராடுகிறது


Palanivelu Kandasamy
மே 13, 2024 16:32

இது அட்டூழியம் அப்படியானால் ரஷ்யா உக்ரைனில் நடத்திக் கொண்டிருப்பது என்னவாம் ? அதைப் பற்றி இதுவரை ஒன்றும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ