உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச மாணவர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறியது

வங்கதேச மாணவர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர் இயக்கம், நேற்று அரசியல் கட்சியாக மாறியது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நம் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனால் வங்க தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் நிர்வாகம் நடக்கிறது. இதில் மாணவர் இயக்க தலைவர் நஹித் இஸ்லாம் செய்தி மற்றும் ஒலிபரப்பு துறையின் ஆலோசகராக பதவி வகித்தார். அவர் சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். புதிதாக அரசியல் கட்சியை அவர் துவங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டாக்காவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் நஹித் இஸ்லாம், தேசிய குடிமக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை துவக்கினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவர் செயல்படுவார். அதன் முக்கிய பொறுப்புகளில் மாணவர் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.குர்ஆன், பகவத் கீதை, பைபிள் மற்றும் புத்த மத நுாலான திரிபிடகம் ஆகியவற்றின் வாசகங்கள் வாசிக்கப்பட்ட பின், கட்சி துவக்க விழா ஆரம்பமானது. நிகழ்ச்சியில் சில அரசியல் கட்சியின் தலைவர்கள், வாடிகன் மற்றும் பாகிஸ்தான் துாதர் ஆகியோர் பங்கேற்றனர்.அதன்பின் நஹித் இஸ்லாம் பேசுகையில், “வங்கதேசத்தில் இனி இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவான அரசியலுக்கு இடம் கிடையாது. வங்கதேச மக்களின் நலனை முன்னிறுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 01, 2025 20:27

இந்தியர்கள் பாகிஸ்தான் ஆதரவு கிடையாது. இனி சீனா ஆதரவு தான். பாகிஸ்தான் சீனா வழியாக உள்ளே புகுந்து கொள்ளும். ஏனெனில் இந்தியா வழியாக உள்ளே புக முடியாது என்பதால்.


Anand
மார் 01, 2025 11:56

கடைந்தெடுத்த அயோக்கிய மூர்க்க தீவிரவாத இயக்கம் மாணவர்கள் போர்வையில் அரசியல் கட்சியாக மாறியது...


Kasimani Baskaran
மார் 01, 2025 10:50

நல்லா வெளங்கும்


ராமகிருஷ்ணன்
மார் 01, 2025 10:20

மாணவர்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறியது, ஏற்கனவே தீவிரவாத கும்பல் ஆக இருந்தது தானே. அடுத்து அல்குவைதா போல ஆயுதம் ஏந்திய அதி தீவிரவாத இயக்கமாக மாறி விட்டது, அதானே.


RAM MADINA
மார் 01, 2025 10:10

மொதல்ல இந்தியாவில் இருக்குற கள்ள குடியேறிகளை திரும்ப எடுங்கடா


Karthik
மார் 01, 2025 07:49

இனி நீ எக்கேடுகெட்டா எனக்கென்ன??


S.L.Narasimman
மார் 01, 2025 07:32

நாம் உதவும் சிறு அண்டைநாடுகளெல்லாம் ஒரு சில காலங்களில் நமக்கு எதிரான நிலைபாட்டை கேவலமாக எடுத்து வருகின்றன. இனி இந்தியா அமெரிக்கா போன்று வர்த்தக நோக்கில் மட்டுமே உறவு ,உதவி என்ற கடுமையாக இன்றைய காலத்துக்கு தேவையான கொள்கையாக மாற்ற வேண்டும்


Sankare Eswar
மார் 01, 2025 07:02

கூமுட்டை கள் ...


சுலைமான்
மார் 01, 2025 04:49

மூர்க்கன்ஸ் வாழ்ற நாட்டுலல தீவிரவாதிகள் தான் மாணவர்கள்.....


Bye Pass
மார் 01, 2025 04:42

மாணவர்கள் இயக்கம் அரசியலில் தாக்கு பிடிக்காது


A Viswanathan
மார் 01, 2025 08:41

இவர் பங்களாதேஷ் சை ஒரு வழி பண்ணாமல் போக மாட்டார் போல தோன்றுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை