உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குழந்தை கொலை வழக்கு: இந்தியப்பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

குழந்தை கொலை வழக்கு: இந்தியப்பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அபுதாபி: குழந்தையை கொன்றதாக கைது செய்யப்பட்ட 33 வயது உ.பி., மாநில பெண்ணுக்கு, ஐக்கிய அரசு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.உ.பி., மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த ஷாஸாதி கான், 33, குழந்தையை கொலை செய்த வழக்கில் அபுதாபி நகரில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது பாதுகாப்பில் இருந்த ஆண் குழந்தையை கொலை செய்ததாக, பெற்றோர் அளித்த புகாரில் அவர் மீது வழக்கு பதிவாகியிருந்தது.வழக்கை விசாரித்த அபுதாபி நீதிமன்றம், 2023ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. கடந்தாண்டு அவரது மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.அவர் வாத்பா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை காப்பாற்றவும், நீதிமன்றத்தில் வழக்கு நடத்தவும் இந்திய துாதரகம் சார்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன.எனினும், மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த அந்நாட்டு நீதிமன்றம், அவரது மரண தண்டனையை உறுதி செய்தது. அவரது மரண தண்டனை பிப்.,15ல் நிறைவேற்றப்பட்டு விட்டதாக, இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில், டில்லி உயர்நீதிமன்றத்தில் இந்த தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.அவரது குடும்பத்தினர், அமீரகம் சென்று இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Sushil Jasper
மார் 05, 2025 07:50

Death sentence or jail term is only for Asians and Africans. For western countries citizen, they have another agreement. None of the local laws as per Shreya [Islam law] will not be used on them. Maximum punishment for western guys is deportation.


Raghavan
மார் 03, 2025 22:29

என்ன ஒரு துரித கதியில் வழக்கை முடித்துள்ளார். 2023 நடந்த குற்றத்துக்கு 2025 லேயே தீர்ப்பும் கொடுத்து மரணதண்டனையையும் நிறைவேற்றிவிட்டார்கள். இதே இங்கு நடந்திருந்தால் குறைந்தது ஒரு 20 வருடங்களாவது ஆகும் தீர்ப்பு வருவதற்கு. நன் நாட்டு சட்டங்களில் ஓட்டைகள் அதிகம். ராஜிவ் காந்தி பிரதம மந்திரியாக இருக்கும் பொது நடந்த ஒரு வங்கி கையாடல் வழக்கில் சொன்னது : There are so many look holes in our law and should be plugged in. அவர் சொல்லிவிட்டு சென்று கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகிறது. சட்டம் என்னமோ அப்படியேதான் இருக்கிறது ஓட்டைகள் அடைக்கப்படவில்லை. WHO TO BELL THE CAT?


தாமரை மலர்கிறது
மார் 03, 2025 22:23

கொலைக்கு கொலை என்பது இஸ்லாமிய நாடுகளின் கொள்கை. இதற்கு இந்தியா ஒன்றும் பண்ணமுடியாது. அரபு நாடுகளுக்கு சென்றால் இது தான் கதி . சாவை எதிர்நோக்கி செல்லும் ஆடு ஜீவிதம்.


Haja Kuthubdeen
மார் 04, 2025 15:32

இஸ்லாமிய நாடுகளின் கொள்கை அல்ல..இஸ்லாம் மமதத்தின் கொள்கை.நீங்க அநியாயமாக ஒருவரின் விரலை துண்டித்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் உங்கள் விரலும் அதே போல் துண்டிக்கப்படும்.இதில் என்ன மணிதாபிமானம் உரிமை மீறல் இருக்கு???


கத்தரிக்காய் வியாபாரி
மார் 03, 2025 21:23

இந்த பெண்ணை பார்த்தால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு அதனால் மனநோயாளி ஆகி இவ்வாறு செய்திருப்பார் என்று தெரிகிறது. சரியான விசாரணை இல்லாமல் இப்படி மரணதண்டனை குடுப்பது தவறு.


Haja Kuthubdeen
மார் 04, 2025 15:38

சரிரான விசாரனை சாட்சிகள் ஆதாரம் இல்லாமல் மரணதண்டனை கொடுக்க மாட்டார்கள்.கொடுக்கவும் கூடாது..நீதிபதியாக நியமிக்கப்படுபவர்கள் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்களை நன்கு கற்று தேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.அடுத்தது கொலையுண்டவரின் தாய் மண்ணித்தால் ஒழிய வேறு எந்த வழியும் இல்லை.


rama adhavan
மார் 03, 2025 20:03

இங்கு மரண தண்டனை கூடாது என கூவும் நபர்களும் உள்ளனரே? அவர்கள் பதில் என்ன?


Haja Kuthubdeen
மார் 04, 2025 15:41

மரணதண்டனை கூடாது என்று பேசும் சமூக ஆர்வலர்கள் யாரும் தன் குடும்பத்தில் நடந்தால் பேச மாட்டார்கள்.


சிவம்
மார் 03, 2025 19:06

குழந்தைகள், சிறுவர், சிறுமியர்கள், முதியவர்கள் போன்றோருக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அவை கொலை, சித்ரவதை போன்ற எந்த குற்றத்திற்கும், நம் நாட்டிலும் அதிக பட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்க பட்டுவிட்டால், இரக்கமே காட்ட கூடாது.


முருகன்
மார் 03, 2025 18:50

இங்கே என்றால் இடைக்கால தடை பெற்றே நாட்கள் கழித்து விடுவார்கள்


வாய்மையே வெல்லும்
மார் 03, 2025 18:19

நம்மூருல முக்கிட்டு தீர்ப்பு வழங்குவதற்க்குள் குற்றம் செய்தவர் பொக்கை பள்ளு கிழவர் / கிழவி ஆகிவீடுவார்கள் பின்னே என்ன.. வயதாகிவிட்டது மருத்வகாரணங்களுக்காக விடுவிப்பு மனுவும் போடுவார்கள். கேடுகெட்ட்ட கையாலாகாத நீதி இந்தியா வில் பார்க்கலாம் .


Raa
மார் 03, 2025 18:19

தண்டனைகள் கடுமையானாதான் குற்றங்கள் குறையும்.


Bye Pass
மார் 03, 2025 20:30

ஆண்டுதோறும் அரபு நாடுகளில் தூக்கிலிடுவது கல்லால் அடித்து கொல்வது கையை வெட்டுவது தொடர் கதை தான் ...


Natchimuthu Chithiraisamy
மார் 03, 2025 18:16

இந்திய நீதிபதிகள் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் ஒரு தண்டனை நிறைவேறினால் குற்றமே இருக்காது என்பதை. பிழைப்புக்கக சட்டம் சார்ந்த தொழில் செய்வது குற்றவாளியை காப்பது ஜாமீன் என்கிற பெயரில் பணம் சம்பாதிப்பது இது சட்டமல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை