உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கமலா ஹாரிஸ் தேர்வு சரியான முடிவு: பில் கிளிண்டன் பாராட்டு

கமலா ஹாரிஸ் தேர்வு சரியான முடிவு: பில் கிளிண்டன் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை தேர்வு செய்தது சரியான முடிவு தான் என முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தெரிவித்தார். அமெரிக்காவில், நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் இறங்குகிறார். சிகாகோவில் நடந்த, ஜனநாயக கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், கமலாவுக்கு ஆதரவு தெரிவித்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது:

எதிரிகளை குறைத்து மதிப்பிடாதீங்க

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை தேர்வு செய்தது சரியான முடிவு தான். 2024ம் ஆண்டில் தெளிவான தேர்வு கிடைத்துள்ளது என தோன்றுகிறது. அதிபராக டொனால்டு டிரம்ப் இருக்கும் போது குழப்பத்தை ஏற்படுத்தினார். அமெரிக்கர்களின் கனவுகளை நனவாக்க கமலா ஹாரிஸ் தன்னை அர்பணித்தார். எதிரிகளை ஜனநாயக கட்சியினர் குறைத்து மதிப்பிட வேண்டாம். கமலா ஹாரிசுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும் ஓட்டளித்தால், மக்களின் கனவுகளை நிறைவேற்ற பணியாற்றுவார்.

மகிழ்ச்சி

எந்த சூழ்நிலையையும் கையாள தயாராக இருக்க வேண்டும். துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸ் மிகவும் சிறப்பாக செயல்படுவதால் நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். கமலா ஹாரிசுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒபாமா, பில் கிளிண்டன் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிபர் தேர்தலில் டிரம்பை கமலா தோற்கடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
ஆக 22, 2024 17:52

அமெரிக்கா அப்படியே இந்திய காங்கிரஸ் ஆட்சியின் தலைமையை காப்பியடிக்கின்றது. கமலா ஹாரிஸ் தந்தை ஜமைக்கன் -ஆப்பிரிக்க நாடு ஆனால் திருமணம் செய்து கொண்டது இந்திய தமிழச்சியை. கமலா ஹாரிஸ் 7 வயதில் தந்தை தாய் விவாகரத்து. இந்திராவின் தந்தை நேரு முஸ்லீம் ஆனால் சொல்லிக்கொள்வது பார்ஸி . ஆப்பிரிக்க இந்திய பெண் அமெரிக்கன்.இந்திரா முதல் கணவர் பெரோஸ் கான் ராஜீவின் அப்பா இரண்டாவது முஹம்மது சஞ்சய் காந்தியின் அப்பா.கமலா ஹாரிஸ் இரண்டாவது கணவர் இப்போது இருப்பவர். எல்லா உறவு, வார்த்தையாடல் எல்லாவிஷயத்திலும் மிக மிக நல்ல ஒற்றுமை. நம்ம கருணாநிதி குடும்பம் டாஸ்மாக்கினாட்டின் தலைமை. இதிலிருந்து ஒன்று மிக மிக நன்றாகத்தெரிகின்றது. நல்ல குடும்பஸ்தன் ஒருக்காலும் நல்ல பதவி இந்தியாவில் வகிக்க முடியாது அது போலத்தான் இப்போது அமெரிக்காவில் கூட. டொனால்ட் டிரம்ப் மீது பல பாலியல் வழக்கு உண்டு. அப்படியே டாஸ்மாக்கினாடு வழியில் அமெரிக்கா நடக்கின்றது. அதைத்தான் ஸ்டாலின் சொல்கின்றார் உலகம் பூராவும் திராவிட மாடல் தான் நடக்கின்றது என்று.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை