உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கு 3 இந்தியர்களிடம் கோர்ட் விசாரணை

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கு 3 இந்தியர்களிடம் கோர்ட் விசாரணை

ஒட்டவா, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்களிடம், அந்த நாட்டின் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. வழக்கின் விசாரணை, 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உறவில் விரிசல்

வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், 2023 ஜூன் 18ல் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த நாட்டின் பார்லிமென்டில் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தால், கனடா - இந்தியா இடையேயான துாதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், ஆல்பர்ட்டா மாகாணத்தின் எட்மன்டன் என்ற பகுதியில் வசிக்கும் கரண் பிரார், 22, கமல்ப்ரீத் சிங், 22, கரன்ப்ரீத் சிங், 28, ஆகிய மூன்று இந்தியர்களை, கனடா போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.இந்த மூவரையும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நீதிமன்றத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக சிறை அதிகாரிகள் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் விசாரணை நடத்துவதற்கு மூன்று பேரும் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறை தண்டனை

தங்களுடைய வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளும் வகையில், வழக்கின் விசாரணையை 21ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இந்த வழக்கில் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 25 ஆண்டுகள், பரோல் இல்லாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கனடா குற்றவியல் சட்டத்தின்படி, கொல்லப்பட்டுள்ள ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மகன் பால்ராஜ் நிஜ்ஜார் உட்பட ஆறு பேருடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எந்த வகையிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்வதற்கு தடை விதிக்கக் கோரி, அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.நீதிமன்றத்தில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை பார்ப்பதற்காக, 50க்கும் மேற்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள், நீதிமன்ற அறையில் குவிந்திருந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள், கொடியை ஏந்தியபடி நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
மே 09, 2024 12:14

நான் முன்பே கூறியதுபோல, இந்த கனடா அரசு, காலிஸ்தான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இப்படி செயல்படுகிறது அந்த அச்சுறுத்தலிலிருந்து முதலில் வெளிவரவேண்டும் அங்குள்ள தீவிரவாதிகளை கலையெடுக்கவேண்டும் உதவி தேவைப்பட்டால், இந்தியாவை அணுகலாம்


Mohan
மே 09, 2024 08:04

தங்களது சொந்த காரணங்கள் மற்றும் பதவி வெறிக்காக அமெரிக்க, வட அமெரிக்கர்கள், மற்ற நாடுகளின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்கும் அயோக்கியத்தனத்தை வெட்கமின்றி செய்வது கேவலம் ஐக்கிய நாடுகள் சபை கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்ப்பது கேவலம் அதுவும் எந்தவித சரித்திர முக்கியத்துவமும், மக்கள் ஆதரவும் இல்லாத, இந்தியாவில் செய்த கிரிமினல் குற்றங்களிலிருந்து தப்பித்து கனடாவில் லாரி டிரைவர்களாக வேலை செய்து வரும் படிப்பறிவற்ற அடியாட்களும் அவர்களை இயக்கும் தாதாக்களும் தான் இந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் இவர்களின் பிள்ளைகளும் அப்படியே அவர்களை அடியொற்றி நடக்கும் மூடர்களே இவர்கள் போடும் ஓட்டுக்காக இந்தியாவை தரம் குறைந்து விமரிசிக்கும் கனடா பிரதமர்,, அமெரிக்கா பின் லேடனால் அவஸ்தைப்பட்டது போல உறுதியாக நடக்கும் கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் முடிவு வரும்


Senthoora
மே 09, 2024 08:45

உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகணும்


Kasimani Baskaran
மே 09, 2024 06:41

கன்னட மண்ணில் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் அரசு ஒரு நாள் தீவிரவாதத்தாலேயே அழியும்


J.V. Iyer
மே 09, 2024 03:56

தேசவிரோதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் கனடா பிரதமர், எத்தைத்தின்னால் பித்தம் தெளியும் என்று தன் பதவியை தக்கவைக்க பெரும்பாடு படுவது தெரிந்ததே அதன் தாக்கம்தான் இது கொடுத்ததற்கு மேலே கூவுகிறார்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை